சிவகங்கை நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து திமுகவினர் சுவரொட்டிகள்.

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் கண்ணியமின்றி பேசுவதாகக் கூறி, அவரைக் கண்டித்து திமுக சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் சிவகங்கை நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. திமுக சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திருமலை குமணன் ஏற்பாட்டில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

சுவரொட்டிகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அதில், “9 கட்சிகள் மாறிய அரை டவுசர் நிர்மல் குமார் அவர்களே... நாவடக்கத்துடன் கண்ணியமாகவும், நாகரிகமாகவும் சட்டமன்றத்தில் பேசுங்கள். இல்லையெனில் திமுக தொண்டர்களால் அடக்கப்படுவீர்கள்” உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. சட்டப்பேரவையில் பொறுப்புடனும் கண்ணியத்துடனும் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர். சிவகங்கை நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

Source: Read Full Article