Chennai Fishes: சென்னை எண்ணூர் கழிமுகம் அருகே கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் உயிரிழந்தது தொடர்பாக அரசு விசாரணை நடத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டன் கணக்கில் செத்து கிடக்கும் மீன்கள்:

சென்னையில் கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. சமூக ஆர்வலர்களை இந்த சம்பவம் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், மீன்கள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “எண்ணூர் கழிமுகம் அருகே கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. மடவை, கிழங்கான், ஊடான், கார்வா, கௌத்தி, இறால், நண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் இறந்துள்ளன. ரசாயனக் கழிவுகள் ஆற்றில் கலந்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம் என மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எண்ணூர் கழிமுகம் அருகே கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன.

மடவை, கிழங்கான், ஊடான், கார்வா, கௌத்தி, இறால், நண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் இறந்துள்ளன.

இரசாயனக் கழிவுகள் ஆற்றில் கலந்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம் என மீனவர்கள்… pic.twitter.com/uZAIfvmS9F

— Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள் (@poovulagu) August 16, 2026

ஆற்றில் ரசாயனம் கலந்ததா?

இக்கழிமுகத்தைச் சுற்றியுள்ள பல்வேறு மீனவ கிராமங்கள் இப்பகுதியை நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அனல் மின் நிலையம் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவுகளால் கொசஸ்தலை ஆறும் கழிமுகமும் மாசடைந்த விஷயம் ஏற்கெனவே அறிவியல் ரீதியாக அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்ட ஒன்று. தொழிற்சாலைக் கழிவுகளால் மீன்வளம் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாவது தொடர்கதை ஆகிவிட்டது. தமிழ் நாடு அரசு உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தி நிலைமையைச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டநிறுவவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு மீனவர்களுக்கான இழப்பீட்டையும் நிறுவனங்களிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் எனக் கோருகிறோம்” என பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?

Source: Read Full Article