மதுரை மாநகராட்சி: ரேபிஸ் இல்லாத நகரம் நோக்கி தெருநாய் தடுப்பூசி திட்டம்!

மதுரை மாநகராட்சி: ரேபிஸ் இல்லாத நகரம் நோக்கி தெருநாய் தடுப்பூசி திட்டம்!
News Image

பொது மக்கள் அச்சமின்றி நடமாடுவதை உறுதி செய்ய எஞ்சியுள்ள வார்டுகளிலும் இந்த தடுப்பூசி மற்றும் கருத்தடை பணிகள் வரும் நாட்களிலும் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணிகள்

மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலத்திற்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு "ரேபிஸ் நோய்" தடுப்பு நடவடிக்கையாக வெறி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம், மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார், இ.ஆ.ப., அவர்களின் உத்தரவிற்கிணங்க கடந்த 18.07.2026 அன்று முதல் நடத்தப்பட்டு வருகிறது.18.07.2026 முதல் 28.08.2026 வரை 9288 தெரு நாய்களுக்கு தடுப்பூசிகள் 5 செலுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் 29.08.2026 மாநகராட்சியின் வாகனங்களின் மூலம் 5 கால்நடை மருத்துவர்கள் மற்றும் 33 நாய்பிடி வீரர்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 5 மண்டலங்கள் மற்றும் 100 வார்டுகளில் 38,348 நாய்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி மற்றும் கருத்தடை பணிகள்

இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சியோடு இணைந்து மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (International trust of Peace, Safe Home Foundation, see Shah Kennel) மற்றும் விலங்கின ஆர்வலர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக, மாநகராட்சி அலுவலர்களின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட 658 நிறுவனங்கள், அரசு அலுவலகம், அரசு இராசாசி மருத்துவமனை வளாகம், முக்கிய கல்வி மற்றும் பொது நிறுவன வளாக பகுதிகளில் 4285 தெரு நாய்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்திற்கும் (100%) முழுமையாக கருத்தடை அறுவை சிகிச்சைகளும், வெறிநாய்கடி தடுப்பூசிகளும் தங்குதடையின்றி போடப்பட்டு இலக்கு எட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் அச்சமின்றி நடமாடுவதை உறுதி செய்ய எஞ்சியுள்ள வார்டுகளிலும் இந்த தடுப்பூசி மற்றும் கருத்தடை பணிகள் வரும் நாட்களிலும் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks