தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ்மட்டத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மிதமான மழை பெய்யக்கூடும் மாவட்டங்கள்

இன்றைய வானிலை நிலவரப்படி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வட கடலோர தமிழகம், பிற மாவட்டங்களின் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மழை நீடிக்கும் பகுதிகள்

நாளை வானிலை நிலவரத்தை பொறுத்தவரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை தொடரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் வானிலை

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article