Kanchipuram & Chengalpattu Weather Today: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்றைக்கும் நாளைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மண்டலங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மாலை மற்றும் இரவு வேளைகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட வானிலை நிலவரம் - Kanchipuram Weather Forecast Today

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 20) அதிகபட்ச வெப்பநிலையாக 35°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26°C ஆகவும் பதிவாகக்கூடும். பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் மேகமூட்டம் அதிகரிப்பதுடன், இடி மின்னலுடன் கூடிய மழை அல்லது லேசான மழை பெய்ய 65% வரை வாய்ப்புள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட வானிலை நிலவரம் Chengalpattu Weather forecast Today

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 20) அதிகபட்ச வெப்பநிலை 36°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°C ஆகவும் இருக்கக்கூடும். பகல் வேளையில் மேகமூட்டமான வானிலையே நிலவும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 9 மைல் அளவில் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

Source: Read Full Article