சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஏபிபி நாடு-க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

நம்பிக்கை இல்லை:

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை எங்கள் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து முழங்கி வந்தார். அது இந்த அரசியல் சூழலில் கட்டாயம் வரும் என்று அவர் உணர்ந்தார். நாங்கள் உணரவில்லை. அதனால்தான் காட்டுமன்னார் கோயிலில் நிற்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

அவர் ஏற்கனவே முன்கூட்டிய உணர்ந்து தீர்க்கதரிசனத்துடன் இருந்தார். நாங்கள் அப்படி இல்லை. எம்எல்ஏ ஆவோம் என்று இருந்தோம். அமைச்சர் ஆவோம் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. அதற்கான தேடலோ எனக்கு இல்லை. நான் களத்தில் நிற்க வேண்டும், மக்களோடு நி்ற்க வேண்டும். மக்கள் பிரச்சினையை சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்று இலக்காக வைத்திருந்தேன். இன்று அதை கூடுதலாக சாத்தியப்படுத்தியுள்ளார் எனது தலைவர்.

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு:

நாங்கள் அமைச்சராகி இருப்பது கடந்த கால் நூற்றாண்டிற்கு மேல் தமிழ்நாட்டில் விசிக போல உழைத்த இயக்கம் வேறு இருக்க இயலாது. அரச பயங்கரவாதம், மக்கள் பிரச்சினைக்காக சிறை என்று ஏராளமாக கூறலாம். கடந்த காலங்களிலே நாங்கள் அமைச்சர்கள் ஆகியிருக்க வேண்டும். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவுடனே திமுக அமைச்சரவையில் சேர்த்திருக்க வேண்டும்.

நாங்கள் 2016ல் இருந்தே இந்த முழக்கத்தை வைத்திருக்கிறோம். 1999ல் தேர்தல் களத்திற்கு வந்தபோது நாங்கள் கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம் எளிய மக்களுக்கும் அதிகாரம் இதுவே நாங்கள் வைத்த முழக்கம். இதன் தொடர்ச்சிதான் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு.

நடந்தது என்ன?

பெரியார், அம்பேத்கர் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட கட்சிகள் இதை ஏற்றுக்கொண்ட கட்சிகள், இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் எல்லாம் செய்வார்கள் என்று நம்பிக்கொண்டிருந்த தருணத்தில் அவர்கள் செய்யவில்லை. இவர்கள் வந்ததால் அவர்கள் செய்கிறார்கள். அதனால் அதிசயம் என்று நினைக்கலாம்.

நீண்ட விவாதத்திற்கு பிறகு அமைச்சரவையில் பங்கெடுக்கிறோம். அதற்கு முந்தைய உரையாடலில் நான் உள்பட அனைவரும் தலைவர்(திருமாவளவன்)தான் அமைச்சராக வேண்டும் என்கிறோம். அவரை முதல்வராக்குவதற்கு நாங்கள் சொல்கிறோம். அவர் அமைச்சரானால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறோம். ஆனால், அவர் நான் அமைச்சராக வேண்டும் என்று தெளிவாக இருந்தார்.

வேலை எப்படி?

இதற்கு முன்பு அதிகாரப்பூர்வமில்லாமல் செய்ததை அதிகாரப்பூர்வமாக செய்கிறேன். நான் எப்போதும் மக்களோடு மக்களாக இருக்கிறேன். கோட்டைக்கு நிறைய பேர் வருகிறார்கள்.வேலையில் நாங்கள் சென்று மனு கொடுப்பதற்கும், நானே மனு வாங்கி செய்து கொடுக்கும் இடத்தில் உள்ளேன்.

கடந்த காலங்களில் எப்படி செயல்பட்டனர் என்று தெரியாது. பொருளில்தான் மனுவில் முதலில் பார்ப்பேன். எந்தெந்த துறை இருக்கிறதோ, அதை ஆய்வு செய்து பின்பற்றுவேன். செய்து கொடுங்கள் என்ற இடத்தில் இருந்து செய்து கொடுப்பேன் என்ற இடத்தில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: Read Full Article