<p style="text-align: justify;">முதல்வர் விஜயை அவதூறாக மிரட்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி ஆனதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை இன்று விசாரித்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.</p>
<p style="text-align: justify;"><em><strong>நிபந்தனை ஜாமீன்</strong></em></p>
<p style="text-align: justify;">காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும், இனி இதுபோன்று பேசக் கூடாது உள்ளிட்ட நிபந்தைகளுடன் மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் வரும் 5ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கூடவுள்ள நிலையில், பேரவை நடைபெறும் நாட்களில் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டியது இல்லை என்றும் மார்க்கண்டேயனுக்கு விலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது</p>
Source: Read Full Article