ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!

ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
News Image

திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் தனிநபர் ஒருவர் அடியாட்கள் கும்பலை அழைத்து சென்று மலைவாழ் மக்களை கட்டையால் தாக்கி அவதூறாக பேசி, கொலைமிரட்டல் விடுத்து நிலத்தை அபகரிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை பகுதியை சேர்ந்த குட்டி என்பவரின் மனைவி லட்சுமி அவருடைய அக்காவான ராமக்கா மற்றும் மல்லிகா, மங்கை, பார்வதி உள்ளிட்டோர் சுமார் ஐந்து ஏக்கர் அளவிலான நிலத்தை பராமரித்து வருகின்றனர்.

இந்த ஐந்து ஏக்கர் அளவிலான நிலத்தை இவர்களுடைய குடும்பத்தார் நான்கு தலைமுறைகளாக விவசாயம் செய்து பராமரித்து வந்ததாக கூறப்படும் நிலையில், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியை சேர்ந்த வேலு என்பவர் அந்த இடத்தை கொடுக்குமாறு லட்சுமி மற்றும் அவருடைய உறவினர்களுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், லட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் நிலத்தை கொடுக்க மறுத்ததால் வேலு நேற்று காலை ஐந்து கார்களில் அடியாட்களை அழைத்து சென்று லட்சுமி மற்றும் அங்குள்ள அவருடைய உறவினர்களை அவதூறாக பேசி கட்டையால் தாக்கியுள்ளனர். மேலும் கத்தியை காட்டி கொலை செய்து விடுவேன் என கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏலகிரிமலை போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் காவல் நிலையம் வரச்சொல்லி விட்டு சென்றுள்ளனர்.

மேலும், ஏற்கனவே ஐந்தாண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சனை நடந்து வருவதாகவும் இதுபோன்று பலமுறை வேலு என்பவர் அவர்களை அடியாட்களை கொண்டு மிரட்டி வருவதாகவும் இது தொடர்பாக லட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்தார் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஏலகிரிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அந்த புகார் மனுவின் மீது இதுவரை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும், படிப்பறிவு குறைவாக உள்ள காரணத்தினால் எங்களின் பலவீனத்தை பயன்படுத்தி கொண்டு வேலு என்பவர் தன்னையும், தன் குடும்பத்தாரையும், உறவினரையும் மிரட்டி வருவதாகவும் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் தாங்கள் உள்ளதாகவும் மேலும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மேலும் தங்களை அவதூறாக பேசி கட்டையால் அடித்து கொலைமிரட்டல் விடுத்த வேலு மற்றும் அடியாட்கள் கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தாங்கள் பராமரித்து வரும் ஐந்து ஏக்கர் அளவிலான சொத்தை மீட்டு தரக்கோரியும் ஏலகிரிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும், மலைவாழ் பழங்குடியினர் மக்கள் பராமரித்து வரும் நிலத்தை தனிநபர் ஒருவர் அடியாட்கள் கும்பலை அழைத்து வந்து கட்டையால் அடித்து அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks