ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
News Image
அம்மா அரசு கொண்டு வந்த திட்டங்களை தான பெயர் மாற்றம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது தவெக அரசு.
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வெளியிட்ட வீடியோவில்
எந்த கடையில் வேண்டுமானாலும் சரக்கு பெற்றுக் கொள்ளலாம்,
பள்ளிக் கல்விக்கும், உயர் கல்விக்கும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. ஜென்சி தலைமுறையால் ஆட்சி அரியணையில் அமர்ந்த விஜய்க்கு கல்வியா முக்கியம்? மதுபான விற்பனையை எப்படி உயர்த்துவது என்பது தான் தவெக அரசின் கவலையாக இருக்கிறது. அதனால் தான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது அரசு. இனி ஆன்லைனில் மதுபானம் முன்பதிவு செய்து, எந்த கடையில் வேண்டுமானாலும் சரக்கு பெற்றுக் கொள்ளலாம், தமிழ்நாடு மாநில வாணிபகழகம் , புதிய இணையதளத்தை டாஸ்மாக்கில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. த.வெ.கஅரசு இதிலே நேற்று பட்ஜெட் ஒரு புறத்தில் பரபரப்பு, இன்னொரு புறத்தில் டாஸ்மார்க் இணையதளத்திற்கு  செய்முறை விளக்கம் வேறு, ஏனென்றால் இந்த நாட்டில் மிக முக்கியமாக மதுபானம்  எளிமையாக வாங்க வேண்டும் என்ற செய்முறையை, எப்படி இந்த ஆன்லைனில் நீங்கள் இணையதளத்தை ஓபன் செய்ய வேண்டும், அதை எப்படி நீங்கள் கையாள வேண்டும் ,எப்படி நீங்கள் சரக்கு வாங்க வேண்டும், இதன் மூலமாக சரக்கு விற்பனை எப்படி உயர்த்த வேண்டும் என்பதெல்லாம் இன்றைக்கு சில நாட்டுக்கு மிக அவசியமான மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. இந்த புதிய சேவை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 4,000 க்கு மேற்பட்ட டாஸ்மார்க் கடைகளில் இருப்பு விவரங்களை வாடிக்கையாளர்கள் நேரடியாக பார்க்க முடியும், இதனால் குடிகாரர்கள் தேவையான பிரான்ட் சரக்கு கிடைக்கிறதா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் நுழையும் பொழுது  21 வயது நிறைவடைந்தவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஒரு நிபந்தனையும் வைத்திருக்கிறார்.
டாஸ்மாக் கடைக்கு சென்று சரக்கைப் பெற்று குடிமகன்கள் கூத்தாடலாம்
அதன் பிறகு 5 முதல் 25 கிலோமீட்டர் சுற்றளவுகளை உள்ள டாஸ்மாக் கடைகள் அல்லது கடை எண், மாவட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் இணையதளத்தில் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும், தேர்வு செய்த மதுபானத்திற்கான தொகையை ஆன்லைனில் டிஜிட்டல் முறையிலே செலுத்தி பின்னர் குறிப்பிட்ட டாஸ்மாக் கடைக்கு சென்று சரக்கைப் பெற்று குடிமகன்கள் கூத்தாடலாம் என்று ஒரு அதிர்ச்சிகரமான அதிரடி அறிவிப்பை இந்த பட்ஜெட் அறிவிப்பை மிஞ்சுகின்ற வகையிலே கொடுத்திருக்கிறார்கள். தாலிக்கு தங்கம் திட்டம் மிதிவண்டி திட்டம் மடிக்கணினி திட்டம் மகளிர்க்கு ஆடுகள் வழங்கும் திட்டம் வீடு வழங்கும் திட்டம் இதையெல்லாம் இதையெல்லாம் 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே 2011 ஆண்டில் அம்மா வழங்கினார்கள் இந்தத் திட்டங்கள் எல்லாம் வெற்றி என்ற பெயரை சூட்டி பெயர் மாற்றத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நிதிநிலை அறிக்கை மொத்தத்தில் தவெக அரசு தங்கள் இயலாமையை செய்து விழி பிதுங்கி இருப்பது நமக்கு கண்கூடாக தெரிகிறது
Source: Read Full Article
கருத்துரையிடுக
Please Select Embedded Mode To Show The Comment System.*
புதியது பழையவை
Post Ads 1
Post Ads 2
Whoever You Are, Whatever You Do, Wherever You May Be
When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks