யார் துரோகி?.. நம்பிக்கையை விற்ற நச்சுப்பாம்புகள்.. காங்கிரஸை சாடிய தயாநிதி மாறன்!

யார் துரோகி?.. நம்பிக்கையை விற்ற நச்சுப்பாம்புகள்.. காங்கிரஸை சாடிய தயாநிதி மாறன்!
News Image

நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள் என காங்கிரஸ் கட்சியை திமுக எம்பி தயாநிதிமாறன் கடுமையாக சாடியுள்ளார்.

துரோகிகள் என விளாசிய ராகுல் காந்தி

சென்னைக்கு நேற்று காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி வருகை தந்தார். மாமல்லப்புரத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு நடைபெற்ற 10 நாட்கள் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் அவர் கலந்துக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “தொகுதி மறுவரையறை தமிழக மக்களின் வாக்குரிமையையும், அதிகாரத்தையும் பறிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் துரோகத்தின் அடையாளமாக தமிழ் மக்களால் அறியப்பட்ட எட்டப்பன் என்று ஒருவன் இருந்தான். அதன்படி தமிழகத்தின் தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் மிகப்பெரிய துரோகிகள்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் மிகவும் பாதிக்கப்படும். ஆர்எஸ்எஸ், பாஜக சேர்ந்து தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு முயற்சி செய்கின்றன. இதைத் தடுக்க வேண்டும். தமிழக மக்கள் தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தை எதிர்க்க வேண்டும்” என கூறினார். ராகுல்காந்தியின் பேச்சு கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்!
தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு #CauveryRights குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்!

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காவு வாங்கும் #MekedatuDam-க்கு எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் துரோகிகள்!#NEET தேர்வு முறையையே ரத்து…
— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) August 2, 2026

நம்பிகையை விற்ற நச்சுப்பாம்புகள்

இதுதொடர்பான தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், “நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்! தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமை குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காவு வாங்கும் மேகதாது அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் துரோகிகள். நீட் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், தேர்வில் முறைகேடு நடப்பதாக மட்டும் பேசுகிறவர்கள் துரோகிகள்!

பாஜகவின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெகவின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே! ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே!

டெல்லி போலீசுக்குச் சற்றும் குறைவில்லாமல், தமிழ்நாடு போலீசும் நீர் போராட்டம் மாணவர்கள் மீது அராஜகத் தாக்குதலை நடத்தியதைக் கண்டிக்காததும் துரோகத்தின் உச்சமே. தமிழ்நாட்டுக்கு வந்து ஒருவர் அரசியல் பாடம் எடுத்ததைப் படித்தபோது, இதெல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தது. அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள் என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks