சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது

சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
News Image

பெண் ஆசிரியருக்கு பாலியல் தொல்லை

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பெரிய கோவிலாங்குளம் அரசு உயர் நிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால் , சங்கரன் கோவில் காந்தி நகர் முதல் தெருவைச் சேர்ந்த ராமசாமியின் மகன் பஞ்சராஜ் , உதவி தலைமை ஆசிரியராக (AHM) பொறுப்பு வகித்து வந்தார்.

இந்த நிலையில் , அதே பள்ளியில் பணியாற்றி வரும் பெண் ஆசிரியைக்கு பஞ்சராஜ் நேரில் மற்றும் தொலைபேசியில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது செயல் பாடுகள் குறித்து பலமுறை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் , எச்சரிக்கப்பட்ட பிறகும் நடத்தையில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

வழக்குப் பதிவு - கல்வி வட்டாரத்தில் பரபரப்பு

பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர் சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில் , பெண் ஆசிரியைக்கு பாலியல் சீண்டல் மற்றும் தொந்தரவு அளித்ததாக கூறப்படும் குற்றச் சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து , பஞ்சராஜ் மீது தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் , அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட இந்தச் சம்பவம் , கல்வித் துறை வட்டாரத்திலும், அப்பகுதி மக்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks