அண்ணன் மகளை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த சித்தப்பா !!

அண்ணன் மகளை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த சித்தப்பா !!
News Image

"ஆசை வார்த்தை கூறி சிறுமி பலாத்காரம்"

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த சரவணன் ( வயது 44 ) என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது அண்ணன் மகளான பிளஸ் 2 படித்து வந்த 17 வயது சிறுமி , அவ்வப்போது சித்தப்பாவின் மகன்களை பார்த்து கொள்ள வீட்டுக்கு வந்து செல்வார்.

கடந்த 2022 - ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி சரவணன் வீட்டிற்கு வந்த போது , சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து கடந்த 2023 - ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 - ம் தேதியும் அந்த பெண்ணை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

வழக்கு பதிவு செய்து கைது

இது குறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் , சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணன் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் அடைத்து இது குறித்து ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில், வழக்கில் இறுதி விசாரணை நடத்தி ஈரோடு மகிளா நீதிமன்ற நீதிபதி சொர்ணகுமார் தீர்ப்பளித்தார். அதில் குற்றவாளியான சரவணனுக்கு ஆயுள் தண்டனையும் , ரூ.5 ஆயிரம் அபராதமும் , அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என கூறினார்.

மேலும், பாலியல் குற்றத்தால் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண தொகையாக ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்தை வழங்கிட தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி சொர்ணகுமார் பரிந்துரைத்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks