சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!

சின்னப்பிள்ளை யார்?  சட்டசபையில் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
News Image

‘ஓ-ரிங்'  கருவியை கண்டுபிடித்த சின்னப்பிள்ளை

தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தொழில் துறை மானிய கோரிக்கையின் மீது பேசிய அமைச்சர் கீர்த்தனா பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதே நேரம் பழைய வரலாற்று நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வதாக பேசிய அவர், மதுரை மாவட்டத்தில் சின்னப்பிள்ளை என்ற மூதாட்டி இருந்தார். அவர் ஹைட்ரோ க்ளோரிக் சிஸ்டத்தில், எண்ணெய் கசியாமல் இருப்பதற்கான ‘ஓ-ரிங்' என்ற கருவியை செய்து கொண்டிருந்தார். அப்பொழுதே வாஜ்பாய், அந்த மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது காலைத் தொட்டு வணங்கியிருந்தார். எனவே அதே போல திட்டத்தை தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள், தொழிற்துறையும், MSME-யும் இணைந்து பெண்களும் வளர வேண்டும் என தெரிவித்திருந்தார்.

தவறான தகவல் பதிவாகி விடக்கூடாது

இந்த நிலையில் அமைச்சர் கீர்த்தனாவின் பேச்சு தவறானது என சமூகவலைதளங்களில் புகைப்பட ஆதாரங்களோடு பரப்பப்பட்டு வருகிறது.  இது தொடர்பாக பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில், தவறான தகவல் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக இதைப் பகிர்கிறேன். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், சின்னப்பிள்ளை வீட்டுக்கு வரவில்லை.  மாறாக டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் தான் வயதில் தன்னைவிட இளையவரான, சின்னப்பிள்ளையின் காலை தொட்டு திரு.வாஜ்பாய் வணங்கினார். இந்நிகழ்வு அன்றைய காலகட்டத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. கிராம மக்களிடையே, 'களஞ்சியம்' என்ற பெயரில், மகளிர் சுயஉதவி குழுக்களை உருவாக்கி நடத்தி சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்து பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தியதற்காக, சின்னப்பிள்ளை அவர்களுக்கு 'ஸ்திரீ சக்தி' என விருது வழங்கப்பட்டது என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

யார் இந்த சின்னப்பிள்ளை.?

சின்னப்பிள்ளை மகளிர் மேம்பாட்டுக்காக களஞ்சியம் அறக்கட்டளை மூலம் பெண்கள் மத்தியில் சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பெண்கள் சுயஉதவிக் குழுவுக்கு கடன் வழங்கி சமூக சேவை ஆற்றியவர். சின்னப்பிள்ளை அவர்களுக்கு ஸ்திரீ சக்தி புரஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் தான் அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் தன்னை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஆசி வாங்கினார்.

தொழில் வாய்ப்புகளை உருவாக்கியதற்காக வழங்கப்படும் 'ஜானகிதேவி' விருதினையும் 1999-ம் ஆண்டு பெற்றவர் சின்னப்பிள்ளை. மறைந்த கலைஞர் முதல்வராக இருந்தபோது ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி பரிசு தந்து இவரைப் பாராட்டினார். மறைந்த அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது  திடீரென சின்னபிள்ளை வீட்டிற்கு நேரடியாக சென்றதும் குறிப்பிடத்தக்கது.

நெட்டிசன்கள் கேள்வி.?

இதனிடையே அமைச்சர் கீர்த்தனாவின் பேச்சு தவறானது எனவும், சட்டமன்றத்தில் இது போன்ற தகவல்களை பதிவு செய்வதற்கு முன்பாக   சரிபார்த்து பேசு வேண்டும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். அமைச்சர் பேச்சுக்கள் அனைத்தும் சட்டமன்ற அவைகுறிப்பில் இருக்கும். 100 ஆண்டுகள் கடந்தும் அந்த ஆவணத்தில் இருப்பது தான் வரலாறு என்று வருங்கால தலைமுறை படிக்கும் வகையில் இருந்துவிட கூடாது என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks