
<p style="text-align: justify;">பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்துதான் இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையினரே சில நேரங்களில் விதிமீறலில் ஈடுபட்டு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். பொதுமக்கள் இத்தகைய நிகழ்வுகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதால் காவல்துறைக்கு பெரும் அவப்பெயர் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கவும், விபத்து தடுப்பு நடவடிக்கையாகவும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டும் போலீசாருக்கு ஒரு நாள் 'ஆப்சென்ட்' போட வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி.க்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு மண்டல ஐ.ஜி.க்கள் அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.</p>
<h3 style="text-align: justify;">புதிய ஹெல்மெட் வாங்கினால் மட்டுமே வாகனம் ஒப்படைக்கப்படும்!</h3>
<p style="text-align: justify;">மண்டல ஐ.ஜி.க்கள் பிறப்பித்துள்ள இந்த உத்தரவின்படி, போலீசார் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது தெரியவந்தால் உடனடியாக அவர்களின் வாகனத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் ஐ.எஸ்.ஐ. (ISI) முத்திரையுடன் கூடிய புதிய ஹெல்மெட்டை வாங்கி வந்த பின்னரே, அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஒப்படைக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">மேலும், போலீசார் காலை 7:00 மணிக்கு பணிக்கு வரும் போது, தாம் ஹெல்மெட் அணிந்து வந்ததை உயர் அதிகாரிகளிடம் உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தது தெரியவந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு ஒரு நாள் 'ஆப்சென்ட்' போட வேண்டும். அதேபோல, சாலையில் போலீசார் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றால் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.</p>
Source: Read Full Article