தொழில்துறையினருக்கு செம்ம நியூஸ்! இனி ஒரே நாளில் அப்ரூவல்.. தமிழக அரசு கொண்டுவந்த செம மாற்றம்!

தொழில்துறையினருக்கு செம்ம நியூஸ்! இனி ஒரே நாளில் அப்ரூவல்.. தமிழக அரசு கொண்டுவந்த செம மாற்றம்!
News Image

தமிழகத்தில் தொழில் துறையையும் சிறு தொழில்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் அரசு அறிமுகப்படுத்திய சுயசான்று கட்டிட அனுமதி திட்டம், தற்போது சிறு தொழிற்பேட்டைகள் உருவாக பெரும் வழிவகுத்துள்ளது. முன்னதாக, 2,500 சதுரடி மனையில் 3,500 சதுரடி வரையிலான குடியிருப்பு கட்டிடங்களுக்கு 2024-இல் அறிமுகப்படுத்தப்பட்ட சுயசான்று திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதன் மூலம் அதிகாரிகளின் தலையீடு இன்றி எளிய முறையில் அனுமதி பெற முடிந்ததால், தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து, 5,000 சதுரடி மனையில் 7,500 சதுரடி வரையிலான தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

சுலபமாக அனுமதி கிடைக்கும்

இணையதளம் உருவாக்கத்தில் ஏற்பட்ட சில தாமதங்களுக்குப் பின், தற்போது இச்சேவை முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் தொழில்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சியால், எவ்வித இடைத்தரகர்களோ தலையீடோ இன்றி சிறிய தொழிற்சாலைகளுக்கு சுலபமாக அனுமதி கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இது குறித்து ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி. பாலமுருகன் தெரிவிக்கையில், பெரிய நிறுவனங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் சிறுதொழில் நிறுவனங்கள், இச்சலுகையைப் பயன்படுத்தி தங்களுக்கான கட்டிடங்களை எளிதாகக் கட்டிக் கொள்ள முடிகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் பெரிய தொழில் பூங்காக்களை ஒட்டிய கிராமங்களில் நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள், தங்களது நிலங்களை 5,000 சதுரடி மனைகளாகப் பிரித்து அடிப்படை வசதிகளுடன் டி.டி.சி.பி. ஒப்புதல் பெற்று விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

திருப்புமுனையாக அமையும்

மேலும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களே மனைகளை வாங்குபவர்களுக்கு சுயசான்று முறையில் கட்டிட அனுமதியையும் பெற்றுத் தர முன்வருவது நிலக் கொள்முதலை மேலும் வேகப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தொழில் தொடங்க முனைவோர் மிகுந்த ஆர்வத்துடன் நிலங்களை வாங்கி வருவதால், அரசின் இந்த சலுகை சிறு தொழில் அமைப்புகளின் வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks