வளர்பிறையில் உயரும்... தேய்பிறையில் குறையும் அதிசய கிணறு: எங்கு உள்ளது தெரியுங்களா?

வளர்பிறையில் உயரும்... தேய்பிறையில் குறையும் அதிசய கிணறு: எங்கு உள்ளது தெரியுங்களா?
News Image

தஞ்சாவூர்: ஒரு கிணற்றில் இருக்கும் நீரின் அளவு சந்திரனின் வளர்ச்சி மற்றும் தேய்ச்சிக்கு ஏற்ப மாறுகிறது என்று கூறினால், முதலில் நம்புவதற்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருமாந்துறை அட்சயநாதசுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள சந்திர தீர்த்தம் குறித்து இதுபோன்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.

திருமாந்துறை கிராமத்தில் யோகநாயகி சமேத அட்சயநாதர் அருள்பாலிக்கும் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 1,200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் இத்தலம், சோழர் கால கட்டிடக்கலைச் சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. செம்பியன் மாதேவியார் காலத்தில் இந்த ஆலயத்திற்கு திருப்பணிகள் செய்யப்பட்டதாகவும் தல வரலாற்றில் கூறப்படுகிறது.

ஆலயத்தின் ராஜகோபுரம், அமைதியான சுற்றுச்சூழல் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள தீர்த்தம் ஆகியவை பக்தர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. குறிப்பாக சந்திர தீர்த்தம் என அழைக்கப்படும் கிணறு இத்தலத்தின் முக்கிய சிறப்பாகப் போற்றப்படுகிறது.

பக்தர்களின் நம்பிக்கைப்படி, வளர்பிறை தொடங்கியதும் இந்தக் கிணற்றில் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்குகிறது. பௌர்ணமி நாளை நெருங்கும்போது நீர்மட்டம் அதிகரிப்பதாகவும், பின்னர் தேய்பிறை தொடங்கியதும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து, அமாவாசை நாளில் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு பல தலைமுறைகளாக தொடர்ந்து வருவதாக உள்ளூர் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தீர்த்தத்துக்கு தலபுராணத்திலும் தனிச்சிறப்பு கூறப்படுகிறது. காலமா முனிவரும் நவகிரகங்களும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டதாகவும், பல்வேறு வழிகளில் முயன்றும் நோய் தீராத நிலையில் சிவபெருமானை சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது திருமாந்துறைக்கு சென்று அட்சயநாதரை வழிபட்டு, அங்குள்ள சந்திர தீர்த்தத்தில் 15 நாட்கள் நீராடுமாறு சிவபெருமான் அருளியதாக நம்பப்படுகிறது.

அதன்படி அவர்கள் திருமாந்துறைக்கு வந்து தினமும் சந்திர தீர்த்தத்தில் நீராடி அட்சயநாதரை வழிபட்டதாகவும், 15-வது நாள் முடிவில் நோய்களில் இருந்து விடுபட்டதாகவும் தலபுராணம் கூறுகிறது. இதனால் இந்தத் தீர்த்தம் நோய் நிவாரண தீர்த்தமாக பக்தர்களால் கருதப்படுகிறது.

மேலும், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கான முக்கிய பரிகாரத் தலமாகவும் இக்கோயில் பக்தர்களால் கருதப்படுகிறது. நீண்டநாள் நோய், மனக்குழப்பம், வாழ்க்கைத் தடைகள் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து விடுபட வேண்டி பக்தர்கள் இங்கு வழிபாடு செய்து வருகின்றனர்.

குறிப்பாக 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமாவாசை நாளில் சந்திர தீர்த்தம் வழக்கத்திற்கு மாறாக பொங்கி வழிந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கோயில் வளாகத்தில் தண்ணீர் சூழ்ந்ததாகவும், இதைக் கேள்விப்பட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தீர்த்தத்தில் நீராடியதாகவும் பக்தர்கள் நினைவுகூருகின்றனர்.

திருமாந்துறை கோயிலுக்கும் அருகில் உள்ள சூரியனார் கோயிலுக்கும் புராணத் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. காலமா முனிவரும் நவகிரகங்களும் சூரியனார் கோயில் பகுதியில் தங்கி, தினமும் திருமாந்துறைக்கு வந்து அட்சயநாதரை வழிபட்டதாக ஐதீகம் நிலவுகிறது.

இவ்வாறு வரலாறு, தலபுராணம், பக்தி நம்பிக்கை ஆகியவற்றுடன் சந்திர தீர்த்தத்தின் நீர்மட்ட மாற்றமும் இணைந்து திருமாந்துறை அட்சயநாதசுவாமி கோயிலுக்கு தனிச்சிறப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறுகிறது என்று உறுதிபட தெரிவிக்கின்றனர். இதனால் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks