Tamil Nadu Weather Update: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றையும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்புநிலையை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழ்மட்டத்தில் நிலவும் பலவீனமான காற்றுமுனை மாறுபாடு காரணமாக இந்த வெப்பநிலை உயர்வு பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேர நிலவரப்படி, சேலம் மாவட்டம் அழகாகபுரம் மற்றும் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசுவதுடன், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட வானிலை நிலவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவுவதுடன், சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட சற்று அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்ட வானிலை நிலவரம்

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகக்கூடும். மாவட்டத்தின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article