தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தொகுதிகளுக்கு சென்று மக்களைச் சந்திக்க வாகனங்கள் இல்லை என்று கோரிக்கை வைத்த நிலையில், முதலமைச்சர் விஜய் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கார் வழங்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்திற்கு இன்று மஹிந்திரா நிறுவனத்தின் சில கார்கள் பரிசோதனை ஓட்டத்திற்காக வந்திருந்தது.

1. Mahindra Scorpio N:

மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார் Mahindra Scorpio. இந்த காரின் அப்டேட் வெர்சன் இந்த Mahindra Scorpio N அமைந்துள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 17.23 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 32.28 லட்சம் ஆகும். பெட்ரோல், டீசல் என இரண்டு வேரியண்டிலும் இந்த கார் ஓடுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட்களிலும் இந்த கார் உள்ளது. 7 சீட்டர், 6 சீட்டரில் இந்த கார் உள்ளது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் 31 வேரியண்ட் உள்ளது.

2. Mahindra XUV 7XO:

மஹிந்திராவின் புகழ்பெற்ற கார் இந்த Mahindra XUV 7XO ஆகும். 2184 சிசி டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட் உள்ளது. 1997 சிசி பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்டும் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 17.60 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 32.65 லட்சம் ஆகும். இதில் 44 வேரியண்ட் உள்ளது.

3. Mahindra Bolero:

மஹிந்திராவின் மிகவும் புகழ்பெற்ற காராக இருப்பது Mahindra Bolero. இந்த காரின் அடிப்படை வேரியண்ட் ரூபாய் 8.49 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 11.90 லட்சம் ஆகும். இதில் 1493 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 4 வேரியண்ட் உள்ளது.

இந்த கார்கள் மட்டுமின்றி இன்னும் சில கார்கள் பரிசோதனை ஓட்டத்திற்காக தலைமைச் செயலகத்திற்கு வந்தது. அந்த கார்கள் சோதனை செய்யப்பட்டனர்.

Source: Read Full Article