ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்.! யாருக்காக விமான நிலையம்.? திமுக- தவெக காரசார மோதல்

ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்.! யாருக்காக விமான நிலையம்.? திமுக- தவெக காரசார மோதல்
News Image

பரந்தூர் விமான நிலையம் - கைவிடப்பட்டது

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த திமுக ஆட்சியில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியானது நடைபெற்றது. ஆனால் இதற்கு இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல கட்டமாக போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தவெக அரசின் தேர்தல் வாக்குறுதியாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மாட்டோம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அந்த வகையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கை விடப்பட்டதாகவும், புதிய இடம் தேர்வு செய்து அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

சட்டசபையில் வாக்குவாதம்

இந்த நிலையில் இந்த பிரச்சனை சட்ட சபையில் எதிரொலிக்கப்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் இன்றைய மானிய கோரிக்கை விவாததின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், நேற்றிலிருந்து திமுக இந்த விமான நிலையம் இல்லையென்றால் தமிழகத்திற்கு முதலீடே இல்லாமல் சென்று விடும் என பரபரப்பி வருகிறார்கள். தொழிற்துறை வருவதற்கு முக்கிய காரணம் ஊழல் இல்லாத முதலமைச்சரும், அமைச்சருமே காரணம். சிங்கள் விண்டோ சிஸ்டத்தில் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அரசுக்கு மட்டுமே தெரிந்த நிலையில், ஒரு கட்சி சார்ந்தவர்கள் பரந்தூரை சுற்றியுள்ள நிலைத்தை வாங்கி நில மோசடி நடைபெற்றுள்ளது. ரியல் எஸ்டேட்டிற்காகவும் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த பகுதியில் 380 ஏரிகள் விவசாய நிலங்கள் உள்ளது. இதனை கருத்தில் கொண்டே விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறினார்.

பரந்தூர் விமான நிலையம் ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை

தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.டி.நிர்மல் குமார், பரந்தூரில் 90 % நிலம் கையகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் 90% நிலம்  கையகப்படுத்தவில்லை. 48 % கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பரந்தூரில் உள்ள கிராமங்களில் ஒரு செண்ட் நிலம் கூட கையகப்படுத்தவில்லை. தற்போதுள்ள விமாநிலையத்திலேயே கூடுதல் விமானங்களை கையாள முடியும். புதிய டெர்மினல் அமைக்கும் போது
பெங்களூர் விமான நிலையத்தை விட அதிக பயணிகளை கையாள முடியும் என தெரிவித்தார். இந்த திட்டத்திற்காக அதிகமாக கதறுவோர் ஜிஸ்கொயர் மாப்பிள்ளைக்காவும், கருப்பு பணத்தை முதலீடு செய்தவர்களும் தான் என தெரிவித்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் ஜி ஸ்கோயர் மாப்பிள்ளை என சொன்னால் என்ன தவறு உள்ளது.? என கேள்வி எழுப்பினார்.

லாட்டரி மாப்பிள்ளைக்காக புதிய விமான நிலையமா.?

இதற்கு பதில் அளித்த திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் இந்த அளவில் பதில் விவாதத்தை கொண்டு செல்ல விரும்பினால் நாங்களும் தயார். ஜி ஸ்கொயர் மாப்பிள்ளக்காக விமான நிலையம் என்று சொன்னால் எந்த லாட்டரி மாப்பிள்ளைக்காக புதிய விமான நிலையம் என நான் கேட்கவா.? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து விமான நிலையம் அமைக்க பரந்தூரில் நிலத்தை தேர்வு செய்தது ஏன் என விளக்கம் அளித்தார். அந்த வகையில் எண்ணூர் பகுதியில் அதிகளவில் தொழில் நிறுவனங்கள் உள்ளது. அடுத்ததாக மற்றொரு பக்கத்தில் கல்பாக்கம், வேடந்தாங்கல் சரணாலயம் என இடங்கள் உள்ளதால் பரனூர் மற்றும் பரந்தூர் என இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கடைசியாக பரந்தூர் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks