BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
News Image

BJP Reshuffle: வரும் 2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை இலக்காக கொண்ட பாஜகவின் அமைப்பு ரீதியான மாற்றங்களை தொடர்ந்து, அமைச்சரவை மாற்றமும் அரங்கேற உள்ளதாம்.

டீம் 2029 - பாஜகவில் அதிரடி மாற்றங்கள்:

மத்தியில் ஆளும் பாஜக மிகப்பெரிய அமைப்பு ரீதியான மாற்றத்தை மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்கான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. அக்கட்சியின் தேசிய தலைவராக நிபின் நதின்  பொறுப்பேற்றதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்களானது, வரும் 2029ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்துவதை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படுகிறதாம். இதில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களுடன், இளம் தலைவர்களையும் சேர்த்து எதிர்காலத்திற்கான பொறுப்பாளர்களை உருவாக்கும் வகையில் பதவிகள் வழங்கப்பட உள்ளதாம். அதோடு, பெண்களுக்கும் அதிக பிரதிநிதித்துவம் வழங்க பரிசீலிக்கப்பட்டுள்ளதாம்.

மூத்த - இளம் தலைவர்களின் கலவை..!

வெளியாகியுள்ள தகவல்களின்படி, அனுபவம் வாய்ந்த தலைவர்கள் மற்றும் இளம் முகங்கள் என்ற இரண்டு தரப்பின் கலவையை கொண்டு புதிய அமைப்புக் குழுவை பாஜக திட்டமிட்டுள்ளதாம்.  அடுத்த முக்கியத் தேர்தல் சுழற்சிக்குக் கட்சியைத் தயார்படுத்தும் ஒரு விரிவான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் பார்க்கப்படுகிறது. 2029 மக்களவைத் தேர்தலை ஒரு நீண்டகால இலக்காகக் கொண்டு, அமைப்பு ரீதியான அனுபவத்தை இளம் தலைவர்களின் ஆற்றல் மற்றும் செல்வாக்குடன் இணைக்கக்கூடிய ஒரு பிரதான கட்டமைப்பை உருவாக்குவதில் பாஜக கவனம் செலுத்துகிறதாம்.  நிதின் நபின் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்மொழியப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாட்டில் ஒரு முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது.

அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புகள்:

சில முக்கிய மத்திய அமைச்சர்களுக்கு கட்சியின் முக்கிய அமைப்பு ரீதியான பொறுப்புகள் ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த கட்சித் தலைவர்களுடன் அமைச்சர்களையும் இணைத்துக்கொள்வது, அரசின் செயல்பாடுகளுக்கும் பாஜகவின் அமைப்பு ரீதியான கட்டமைப்புக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தக்கூடும் என கட்சி தலைமை கருதுகிறதாம். அடுத்த தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், கட்சி தனது அரசியல் செய்திகளையும் அமைப்பு ரீதியான நடவடிக்கைகளையும் இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைக்கவும் இது உதவக்கூடும்.

இதையும் படியுங்கள்:CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்

தேர்தல் 2029 - தயாராகும் பாஜக:

உடனடி அரசியல் சவால்களை கடந்து, 2029 மக்களவைத் தேர்தலுக்குத் தனது அமைப்பைத் தயார்படுத்தும் நோக்கில் பாஜக இந்த அமைப்பு ரீதியான மாற்றத்தை கையிலெடுத்துள்ளது. இளம் தலைவர்கள் கட்சியைப் புதிய வாக்காளர்களுடன் இணைக்க உதவும் வேலையில்,  அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தொடர்ச்சியையும் அமைப்பு ரீதியான நிலைத்தன்மையையும் வழங்குவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அமைப்பு ரீதியான பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்துவதற்கும், பெண் வாக்காளர்களிடையே அதன் தொடர்பை வலுப்படுத்துவதற்கும் ஆன உத்தியின் ஒரு பகுதியாக, பெண் தலைவர்களை அதிக அளவில் இணைத்துக்கொள்வதும் எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த தலைவர்கள், இளம் உறுப்பினர்கள் மற்றும் பெண் தலைவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், ஆகியவற்றின் மூலம் தற்போதைய சூழலை தொடர்ந்தபடியே ஒரு பரந்த மற்றும் அதிக பிரதிநிதித்துவமுள்ள நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சி பாஜகவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றம்..!

பாஜகவின் அமைப்பு ரீதியிலான மாற்றங்களை தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்  அமைச்சர் பொறுப்புகளில் மாற்றங்களையோ அல்லது புதிய முகங்களின் சேர்க்கையையோ எதிர்பார்க்கலாம். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை மனதில் கொண்டு அமைச்சரவை மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாம். அதோடு தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற பாஜக கூட்டணிக்குள் கொண்டுவரப்பட உள்ள, புதிய கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட உள்ளதாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks