Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி

Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
News Image

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நிலையில், கல்வி வளாகம், பேருந்து நிலையம், வழிபாட்டு தளங்கள் என அதன் அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனையடுத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்ட நிலையில், 500 மீட்டர் சுற்றளவில் இன்னும் 127 கடைகள் செயல்பட்டு வருவதாக வி தி லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  தமிழக முதல்வர் விஜய்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசு கடந்த மே 12, 2026 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் 500 மீட்டர் சுற்றளவிற்குள் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

717 டாஸ்மாக் கடைகள் அகற்றம்

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 'வி தி லீடர்ஸ்' சார்பில் தமிழகத்தை போதைப்பொருள் இல்லா மாநிலமாக மாற்றும் விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்ததாகவும், அதன் ஒரு பகுதியாக மதுபான பயன்பாடு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார். இதன்படி, சென்னையில் முதற்கட்டமாக நடத்தப்பட்ட கள ஆய்வில், அரசின் அறிவிப்பில் கூறப்பட்ட 717 கடைகள் மட்டும்தானா விதிமுறைகளை மீறுகின்றன என்பதை ஆய்வு செய்தபோது, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் தொடர்ந்து இயங்கி வந்த மேலும்  10 டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்தக்கட்டமாக இந்த ஆய்வை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டதாகவும், அந்த வகையில் தகவல்களைப் பெற சிறப்பு படிவம் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

500 மீட்டரில் 129 டாஸ்மாக் கடைகள்

பொதுமக்கள் அளித்த அந்த தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், 500 மீட்டர் சுற்றளவில் விதிமுறையை மீறி தமிழகம் முழுவதும் 129 டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டதாக அந்த கடிதத்தில் கூறப்பிட்டுள்ளார். இந்த 129 கடைகளின் பட்டியல் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த பட்டியலை ஆய்வு செய்து, விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் அந்த  டாஸ்மாக் கடைகளை விரைந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழகத்தில் மதுபானங்களின் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியது என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை,

129 டாஸ்மாக் கடைகளை அகற்றுங்கள்

2019-ஆம் ஆண்டு தமிழகத்தில் மது அருந்துபவர்கள் மாநில மக்கள் தொகையில் 14.2 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 2023–24-ஆம் ஆண்டுக்கான NFHS தரவின்படி 2026-இல் அது 23.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 சதவீதம் அதிகரித்திருப்பது மிகுந்த கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே  500 மீட்டர் விதிமுறையை முழுமையாக அமல்படுத்தி, விதிமுறைகளை மீறும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அண்ணாமலை அந்த கடிததத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks