தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கம்போல வெற்று பட்ஜெட் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தவெக அரசின் முதல் பட்ஜெட்

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற நிலையில், இந்த அரசின் முதல் பொது பட்ஜெட் நேற்று நிதியமைச்சர் மரிய வில்சனால் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வேளாண் பட்ஜெட் பற்றி எதிர்க்கட்சிகள் என்ன மாதிரியான கருத்துகளை தெரிவித்துள்ளது என்பதைக் காணலாம்.

காற்றில் பறக்கவிடப்பட்ட விவசாயிகள் நலன்

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்ட பதிவில், “ கோட் சூட் போட்ட விவசாயி முதல்வர் அவர்களே..இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக வேளாண் பட்ஜெட்டில், தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ. 3,500 மற்றும் கரும்பிற்கு ரூ. 4,500 வழங்கப்படும் என்று அறிவித்தது என்னாச்சு..?

60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்னாச்சு...?விவசாயி உரிமைத் தொகை விதைப்புக் கால நிதியுதவி ரூ. 15,000/- என்னாச்சு? சிம்பிளாக சொல்லனும்னா நீங்க நடிச்ச கத்தி பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது. மூன்றுவேளை பசி எடுத்தா சாப்பாட்டை நினைக்கிறோம்..! ஆனா அந்த சாப்பாட்டை உருவாக்குற விவசாயியை மட்டும் மறந்துடுறோம்..!

Also Read: ரேஷன் கார்டு இல்லையா? கவலை வேண்டாம்... புதுச்சேரியில் களமிறங்கிய 'எக்ஸ்ட்ரா லைட்' கேஸ் சிலிண்டர்!

அப்படித்தான் இந்த தவெக அரசு பல கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துவிட்டு, அதற்கு வடிவம் கொடுக்கும் விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்டது போல் அமைந்திருக்கிறது இந்த வேளாண் பட்ஜெட்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் பாராட்டு மழை பட்ஜெட்டா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சி குளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் 2026 தமிழக வேளாண் பட்ஜெட். மற்றுமொரு பெயர் மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?

குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Source: Read Full Article