தவெக அரசின் வேளாண் பட்ஜெட்

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், நேற்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதனையடுத்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் டாப் 10 அறிவிப்புகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

வேளாண் பட்ஜெட்- முக்கிய அறிவிப்புகள்

1. "வேளாண்மை பயிர்க் காப்பீட்டில் நடைபெறும் நிலம் 100 சதவீதம் கொண்டுவரப்படும்" என்ற அரசின் தொலைநோக்குத் திட்டத்தின்படி, 2026-2027 ஆம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தை 37 மாவட்டங்களை உள்ளடக்கிய 14 தொகுப்புகளில் குறுவை, சம்பா மற்றும் குளிர்காலப் பருவங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களில் செயல்படுத்த, 648 கோடியே 55 இலட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15 இலட்சம் விவசாயிகள் பயனடைவதுடன், 36 இலட்சம் ஏக்கர் சாகுபடிப் பரப்பு காப்பீடு செய்யப்படும்.

2. உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், இயற்கை, உயிர்ம வேளாண் முறைகளை ஊக்குவித்தல் ஆகிய செயல்பாடுகளை மேற்கொண்டு வளமான தமிழ் மண்ணை வருங்காலம் காணுமாறு "தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்" 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்தாண்டுத் திட்டமாக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.

3. 2026-27 ஆம் ஆண்டில் "உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்" செயல்படுத்திட மாநில நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாயிகளுக்கான விருதுகள்

4. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துகள், பருத்தி உள்ளிட்ட ஒன்பது பயிர்களில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு, அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, மாவட்ட அளவில் "வெற்றி விவசாயி விருது" வழங்கப்படும். முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் என 90 பரிசுகள், 67 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.

5. தமிழ்நாட்டில், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகள் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து அடுத்த ஐந்து ஆண்டுகளில், உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வகையில், பயறுவகைகளில் 65 கோடியே 28 இலட்சம் ரூபாயிலும், உணவு எண்ணெய் வித்துகளில் 138 கோடியே 36 இலட்சம் ரூபாயிலும், ஆக மொத்தம் 203 கோடியே 64 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் "பயறுவகைகள் மற்றும் உணவு வித்துகளில் தன்னிறைவுக்கான எண்ணெய் இயக்கம்" செயல்படுத்தப்படும்.

"வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம்"

6. வீட்டுத்தோட்டங்களில்இரசாயன பயன்படுத்தாமல் உரங்களைப் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி செய்யப்படுவதால் பாதுகாப்பு நச்சுத்தன்மையற்ற பழங்களும் காய்கறிகளும் உற்பத்தி ஊட்டச்சத்துப் உறுதிப்படுத்தப்படுவதுடன், குறைகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதும் எனவே, நகர்ப்புரங்களில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் கிராமப்புரங்களில், வீட்டைச் சுற்றியுள்ள நிலப் பகுதிகளிலும் செடி வளர்ப்புப் பைகளுடன் கூடிய தொகுப்புகள். செங்குத்துத் தோட்டம் மற்றும் நீரியல் தோட்டம் ஆகிய அமைப்புகளில் காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகள் போன்றவற்றை வளர்த்து மனமலர்ச்சியையும், நலமான சூழலையும் ஏற்படுத்த "வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் திட்டம்" நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.

இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியம்

7. 2026-27 ஆம் ஆண்டில், 227 கோடியே 20 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் 24,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் சுமார் 8,870 பவர் டில்லர்கள், 5,090 விசைக்களையெடுப்பான்கள். 1,400 சுழற்கலைப்பைகள், 855 டிராக்டர்கள் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டு முதல், சூரியக் கூடார உலர்த்தி அமைக்க அதிகபட்ச மானியமாக இருந்த 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயினை உயர்த்தி 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும். பெண் விவசாயிகளிடையே வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதற்காக, இத்திட்டத்தில் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

"வெற்றி வான்மகள்" திட்டம்

8. இந்தியாவில் ட்ரோன் தொழில்நுட்பம் விவசாயம், கட்டுமானம், சரக்குப் போக்குவரத்து, கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.பெண்களை ட்ரோன் இயக்குபவர்களாக மாற்றுவதன் வாயிலாக வேளாண்மையில் உரம், பூச்சிக்கொல்லி தெளித்தல், பயிர்க் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகள் எளிதாக்கப்படுவதுடன், வேளாண் பணிகளில் ஆள்பற்றாக்குறையை எதிர்கொள்ள வாய்ப்பாகவும் அமையும். இதற்காக, தகுதியுள்ள 100 மகளிர் உள்ளிட்ட 500 நபர்களுக்கு மாநில அரசு செலவில் ட்ரோன் இயக்குபவர் பயிற்சி மற்றும் இயக்குபவர் உரிமம் (Drone Pilot License) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை விமானப் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். பயிற்சி பெற்ற 50 மகளிருக்கு ட்ரோன்கள் 50 சதவீத மானியத்தில், 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து வழங்கப்படும். பெண்களைக் காக்க சிங்கப்பெண் படையை உருவாக்கிய நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், விவசாயம் காக்க, வான்மகள் படையை உருவாக்க உள்ளார்.

சூரிய சக்தி பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டம்

9. வேளாண்மையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும், விவசாயிகளுக்கு நிலையான நீர்ப்பாசன வசதிகளை உறுதி செய்வதற்கும், டீசல் பம்புசெட்டுக்கு மாற்றாக, மின்சார இணைப்பு இல்லாத பாசன நீர் ஆதாரங்களுக்கு மின் கட்டமைப்புடன் சாராத, தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் 1,000 விவசாயிகளுக்கு மானிய உதவியுடன் அமைத்துத் தரப்படும். பாசனத்திற்காக விவசாயிகள் தொடர் செலவினம் மேற்கொள்வதைத் தவிர்க்க ஏதுவான, சுற்றுச்சூழலுக்கு உகந்த இத்திட்டத்திற்கென, 2026-27 ஆம் ஆண்டில், 23 கோடியே 6 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

Source: Read Full Article