Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்

Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
News Image

Aavin Milk Price: பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பான தகவல் உற்பத்தியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பயனர்களிடையே கலக்கத்தை உருவாக்கியுள்ளது.

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த முடிவு?

நீண்ட கால பரிசீலனைகளுக்குப் பிறகு ஆவின் அமைப்பு மூலமாக கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையை உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாம். இதுதொடர்பான அறிவிப்பை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே, 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிக்க வாய்ப்புள்ளதாம். அதன்படி, பசும் பாலின் விலை லிட்டருக்கு 5 ரூபாய், எருமைப் பாலின் விலை லிட்டருக்கு 7 ரூபாய் வரையிலும் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் வழங்கும் விலையை வழங்க முடியாததால், ஆவின் அமைப்பின் பால் கொள்முதல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்த விலை உயர்வு முடிவை அரசு எடுத்துள்ளதாம். இதனால் ஆவின் நிறுவனத்திற்குப் பால் வழங்கும் சுமார் 3.6 லட்சம் பால் விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரியும் பால் கொள்முதல்..! தற்போதைய விலை நிலவரம்..!

தற்போதைய நிலவரப்படி ஆவின் நிறுவனம் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 38 ரூபாய் வரையிலும், ஒரு லிட்டர் எருமைப்பாலுக்கு 47 ரூபாய் வரையிலும் வழங்கி வருகிறது. ஆனால், அண்மையில் கொள்முதல் விலையை உயர்த்திய தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 42 முதல் 45 ரூபாய் வரையிலும், ஒரு லிட்டர் எருமைப் பாலுக்கு 50 முதல் 55 ரூபாய் வரையிலும் வழங்கி வருகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் ஆவினுக்கு பால் விநியோகிப்பதை தவிர்த்து தனியார் நிறுவனங்களுக்கு பாலை வழங்கவே முன்னுரிமை வழங்குகின்றனர். அந்த வகையில் ஆவின் பால் கொள்முதல் 34 லட்சம் லிட்டரிலிருந்து 30 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால், ஆவினின் விநியோகம் வெகுவாக குறைந்து தனியார் பொருட்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும்.

பால் கொள்முதலை உயர்த்த அரசு இலக்கு..!

ஆவினின் தினசரி பால் கொள்முதலை, தற்போதுள்ள சுமார் 30 லட்சம் லிட்டரிலிருந்து 39 லட்சம் லிட்டராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள விலைத் திருத்தத்தின்படி, பசும் பாலுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 43 ஆகவும், எருமைப் பாலுக்கான விலை லிட்டருக்கு ரூ. 54 ஆகவும் உயரக்கூடும். ஒவ்வொரு கிராம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திலிருந்தும் 100 லிட்டர் கொள்முதல் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மாநிலத்தில் இதுபோன்ற சுமார் 9,500 சங்கங்கள் உள்ளன. இதன் மூலம், சில வாரங்களுக்குள் ஆவின் நிறுவனம் ஒரு நாளைக்கு சுமார் ஒன்பது லட்சம் லிட்டர் கொள்முதலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக கொள்முதல் விலைகள் கலப்படப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படியுங்கள்: TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை

ஆவின் விலை நிலவரம்:

விலை உயர்வால் ஆவின் நிறுவனத்தின் செலவு ஆண்டுக்கு சுமார் ரூ.580 முதல் ரூ.590 கோடி வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தரப்படுத்தப்பட்ட மற்றும் டோன் செய்யப்பட்ட பாலின் சில்லறை விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தியிருந்தது. 2021 மே மாதம் திமுக அரசு பதவியேற்ற பிறகு, ஒரு லிட்டர் விலை ரூ.3 குறைக்கப்பட்டது. அப்போதிருந்து, தரப்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.44-க்கும், டோன்ட் பால் ஒரு லிட்டர் ரூ.40-க்கும் விற்கப்பட்டு வருகிறது. தனியார் பால் நிறுவனங்களை விட ஆவின் பாலின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.20 முதல் ரூ.22 வரை குறைவாக உள்ளது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக, ஆவின் நிறுவனத்தின் பால் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கலக்கத்தில் ஆவின் பயனாளர்கள்:

தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்திய போது, விற்பனை விலையும் உயர்த்தப்பட்டது. அதே பாணியில் கொள்முதல் விலையை உயர்த்த முடிவு செய்துள்ள ஆவின் அமைப்பும், செலவுகளை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. எனவே, பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பான தகவல் உற்பத்தியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பயனர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks