இனி வரும் காலங்களில் பெண்கள் பற்றி இழிவாக பேசியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல நடிகை குறித்து அவதூறாக இரட்டை அர்த்தத்தில் பேசிய வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக தஞ்சாவூருக்கு அழைத்து செல்லப்பட்டார். கிட்டதட்ட 10 மணி நேர நடவடிக்கைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அவரின் கைது நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இப்படியான நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “ஊழலை ஒழித்தது போல் பெண்களை அருவருப்பாக பேசக்கூடிய கலாச்சாரத்தை ஒழிக்க கூடிய ஒரு ஆட்சியை உருவாக்க வேண்டும். அதுதான் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் கொள்கையாக உள்ளது” என தெரிவித்தார்.

அதற்காகத்தான் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்தது சிறையில் அடைப்பதற்காக அல்ல என நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தெளிவாக சொல்லிவிட்டார். விசாரணைக்காக மட்டும் தான் உதயநிதி அழைத்து செல்லப்பட்டார். ஆனால் இந்த கைதுக்குப் பிறகு அவரை திமுக தியாகியாக மாற்ற பார்க்கிறது.

100 வழக்கறிஞர்கள் வந்து ஆலோசனை செய்த பிறகு உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்தார். இதனை காலை 8 மணிக்கே அவர் அளித்திருக்கலாம்.

கரூர் சம்பவத்தை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் வெளியிட்ட வீடியோவில், என்னை சுற்றி இருப்பவர்களை விட்டு விடுங்கள். நான் வீட்டில் தான் இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் என்னிடம் வாருங்கள் என தைரியமாக தெரிவித்தார். அப்படி இருக்கும் நிலையில் பெண்களை அருவருப்பாக பேசிய உதயநிதி கழிவறையில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து இருந்தது தான் காலமும் நேரமும் என சொல்லலாம்.

காலை 8 மணிக்கு காவல்துறை உதயநிதி வீட்டிற்கு சென்ற நிலையில் 8.15 மணிக்கு நான் உடை மாற்றி விட்டு வருகிறேன், கழிவறை சென்று வருகிறேன் என தெரிவித்துள்ளார். இது ஒரு அடிப்படை கடமை என்ற நிலையில் 10.15 மணி வரை அவர் கழிவறையை விட்டு வெளியே வரவில்லை. அவரை டாய்லெட் புரட்சியாளர் உதயநிதி என அழைக்கலாம். காலமும் நேரமும் 24 மணி நேரத்தில் எப்படி உங்கள் ஆணவத்தை அடக்குகிறது என்பதை பாருங்கள்.

வாழ்க்கை முழுவதும் இந்த சம்பவத்தை உதயநிதி மறக்கவே மாட்டார். விசாரணை தானே வாருங்கள் என தைரியமாக காவல்துறையினர் வந்த உடனேயே உதயநிதி சென்று இருக்க வேண்டியதுதானே?... மனிதனாக இருப்பவர்கள் தவறு செய்து விட்டால் அதனை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவிக்கலாம். ஜெயலலிதா உட்பட ஆகச்சிறந்த தலைவர்கள் கூட தங்கள் தவறை ஒப்புக்கொண்டு உள்ளார்கள். ஆனால் நான் எந்த தவறும் செய்யவில்லை என சிரித்துக் கொண்டே சொல்வதுதான் ஆணவத்தின் உச்சம்.

உதயநிதிக்கு பிறப்பால் பிரச்சனை இருக்கிறது. அவரை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அனுப்ப வேண்டும். ஒரு பெண்ணை நோக்கிய தவறான பார்வை பிறப்பிலிருந்து தான் வரும்” என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா காட்டமாக தெரிவித்தார்.

Source: Read Full Article