Nepal Flood Survival: நேபாள வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 670-ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேபாள வெள்ள பாதிப்பில் இருந்து தப்பித்த தம்பதி

கடந்த ஆகஸ்ட் 26ம் தேதியன்று திபெத் எல்லையை ஒட்டிய நேபாளத்தின் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டு உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த இயற்கை பேரிடரால் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 100 தமிழர்கள் உட்பட 2,426 பேர் காணாமல் போயுள்ளனர். வெள்ளத்திற்குப் பிறகு மொத்தம் 90 அமெரிக்கர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, தீவிரமான மீட்பு பணிகள் மூலம் சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதேநேரம், நொடி நேர சிந்தனையால் இந்த இயற்கை பேரிடரில் இருந்து உயிர் பிழைத்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதியின் கதை கேட்போரை ஆச்சரியமடைய செய்கிறது.

களேபரமான கலகலப்பான சுற்றுலா பயணம்:

அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அஞ்சனா ராஜாவும் அவரது கணவர் பட்டாபிராமன் வெங்கடேசனும் திபெத்திற்குத் தங்களது முதல் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் தான் இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளடு. நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் சுற்றுலாப் பேருந்தினுள் நிலவிய கலகலப்பான சூழல், ஒரு நொடியில் பெரும் துயரமாக உருவெடுத்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அஞ்சனா, ”ரசுவா மாவட்டத்தில், தங்களது சுற்றுலாப் பேருந்தை நோக்கி ஒரு பெரிய சுவரை போன்று நீர் பாய்ந்து வருவதைக் கண்டபோது, தப்பிக்க வழியே இல்லை என்று நினைத்தேன். நான் இறக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியும் என கருதினேன்” என குறிப்பிட்டுள்ளார்.

50-60 அடி உயரத்தில் வெள்ளம்

இந்த தம்பதி சீன எல்லைக்கு அருகிலுள்ள நேபாள கிராமமான திமுரே வழியாகப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, திடீரென மலைகளிலிருந்து வெள்ளமும் இடிபாடுகளும் பெருக்கெடுத்து ஓடி வந்தன. அதுகுறித்து பேசுகையில், முதலில் அதனை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது 60 முதல் 70 அடி நீளமுடையதாகவும், பழுப்பு நிறத்தில் தூசி நிறைந்ததாகவும் இருந்தது. ஆரம்பத்தில் அதனை ஒரு காட்டுத் தீ என்று கருதினோம். நிலநடுக்கம் ஏற்பட்டதா என்று எங்களால் சொல்ல முடியவில்லை. பனிச்சரிவு ஏற்பட்டதா என்றும் எங்களால் சொல்ல முடியவில்லை. இவை அனைத்தும் எங்களிடமிருந்து வெறும் 50 அடி தொலைவில் நிகழ்ந்து கொண்டிருந்ததது.

இதையும் படியுங்கள்: Minister Nirmalkumar: ஒரே ஃபைல், ஓடிப்போன உதயநிதியின் நண்பர்..! ஒருத்தரையும் விடமாட்டோம் - நிர்மல் குமார் வார்னிங்

பேருந்தில் இருந்து குதித்தோம்..

வாகனத்தின் முன்புறத்தில் எங்களது பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் என யாருமே இல்லை அவர்கள் ஏற்கனவே குதித்து தப்பித்து இருந்தனர். தங்களை நெருங்கிக் கொண்டிருந்த நீர் சுவர் தொடர்பான வெள்ளத்திற்கு மத்தியில், எனனது கணவரின் சட்டை காலரை பிடித்துக்கொண்டு ஓடு என அலறினேன். சில நிமிடங்களில் 500 படிகட்டுகளை ஏறி உயரமான இடத்தை அடைந்தோம். சுமார் 10 அடி மேலே சென்றபோதே அந்தப் பிரம்மாண்டமான ஒன்று கீழே இறங்கி வருவதை என்னால் பார்க்க முடிந்தது. நாங்கள் தாங்கள் முதலில் சென்றடைந்த இடம் ஒரு காவல் தள முகாம். அந்த முகாமும், அங்கு இருந்த மக்களும் எங்களது கண் முன்பே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

கண் முன்பே அடித்து செல்லப்பட்ட வீடுகள்..!

எதிர்வினையாற்ற அதிக நேரம் இல்லாததால்,உயரமான நிலத்தை நோக்கி விரைந்து ஓடினோம். வழியில், வீடுகள் இடிந்து விழுவதையும், பிரம்மாண்டமான வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள் அலறி அழுவதையும் கண்டோம். அந்த ஏற்றம் ஆபத்தானதாக இருந்தது, ஆனாலும் ஒரு வழிகாட்டியின் உதவியாலும், கட்டுப்படுத்த முடியாத பரபரப்பாலும், சில நொடிகளில் அருகிலுள்ள மலையின் உச்சியில் இருந்த ஒரு சமதளப் பகுதியை அடைந்தோம். அவ்வளவு உயரத்திற்கு ஏறிவிட்டோம் என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை. பயணம் முழுவது என் கணவரை நான் விடவே இல்லை. அவர் என்னுடன் இருப்பதை நான் உறுதி செய்துகொண்டேன். அவரை மீண்டும் மீண்டும் பற்றிக்கொண்டே இருந்தேன். அவர் என் வாழ்வில் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்" என அஞ்சனா முழு அச்சத்தில் இருந்தும் விலகாத நிலையிலேயே எதிர்கொண்ட சம்பவங்களை விளக்கியுள்ளார்.

உயிர் தப்பி முழு குழு..!

அந்தத் தம்பதியினர், உள்ளூர் மக்களுடனும் மற்ற சுற்றுலாப் பயணிகளுடனும் நெருக்கமாகத் தங்கி, ஒரு ஆட்டுக் கொட்டகையில் இரவைக் கழித்தனர். மறுநாள், அவர்கள் விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதனிடையே அந்த தம்பதியினர் மட்டுமல்ல, அவர்களது சுற்றுலாப் பேருந்தில் இருந்த அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.

Source: Read Full Article