வரிகள் மூலமாக மூலமாக ஒவ்வொரு மாநிலத்திடம் இருந்தும் மத்திய அரசுக்கு பல லட்சம் கோடி வருவாயாக கிடைத்து வருகிறது. இந்த வரி வருவாயில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு பங்கு பிரித்து வழங்க வேண்டியது அவசியம் ஆகும்.

1.9 லட்சம் கோடி ரிலீஸ்:

இந்த சூழலில் இன்று வரி வருவாய் பங்கை மத்திய அரசு விடுவித்துள்ளது. மொத்தமாக ரூபாய் 1 லட்சத்து 9 ஆயிரத்து 19 கோடியை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூபாய் 4 ஆயிரத்து 466 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு மத்திய அரசு மிகப்பெரிய அளவிலான தொகையை விடுவித்துள்ளது.

👉 Union Government releases tax devolution of ₹1,09,019 crore to State Governments, as one advance instalment to accelerate their capital and developmental expenditure

Read more ➡️ https://t.co/9ZENjsLdnj pic.twitter.com/qE0JVF9jd9

— Ministry of Finance (@FinMinIndia) August 1, 2026

எந்த மாநிலத்திற்கு எவ்வளவு?

எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி வருவாயை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது என்பதை கீழே காணலாம்.

1. ஆந்திரா - ரூபாய் 4 ஆயிரத்து 597

2. அருணாச்சல பிரதேசம் - ரூபாய் 1476 கோடி

3. அசாம் - ரூபாய் 3 ஆயிரத்து 552 கோடி

4. பீகார் - ரூபாய் 10 ஆயிரத்து 845 கோடி

5. சத்தீஸ்கர் - ரூபாய் 3 ஆயிரத்த 602 கோடி

6. கோவா - ரூபாய் 398 கோடி

7. குஜராத் - ரூபாய் 4 ஆயிரத்து 94 கோடி

8. ஹரியானா - ரூபாய் 1,484

9. இமாச்சல பிரதேசம் - ரூபாய் 996 கோடி

10. ஜார்க்கண்ட் - ரூபாய் 3 ஆயிரத்து 660 கோடி

11. கர்நாடகா - ரூபாய் 4 ஆயிரத்து 504 கோடி

12. கேரளா - ரூபாய் 2 ஆயிரத்து 597 கோடி

13. மத்திய பிரதேசம் - ரூபாய் 8 ஆயிரத்து 10 கோடி

14. மகாராஷ்ட்ரா - ரூபாய் 7 ஆயிரத்து 22 கோடி

15. மணிப்பூர் - ரூபாயய் 682 கோடி

16. மேகலாயா - ரூபாய் 688 கோடி

17. மிசோரம் - ரூபாய் 615 கோடி

18. நாகலாந்து - ரூபாய் 524 கோடி

19. ஒடிசா - ரூபாய் 4 ஆயிரத்து 819 கோடி

20. பஞ்சாப் - ரூபாய் 2 ஆயிரத்து 176 கோடி

21. ராஜஸ்தான் - ரூபாய் 6 ஆயிரத்து 460 கோடி

22. சிக்கிம் - ரூபாய் 365 கோடி

23. தமிழ்நாடு - ரூபாய் 4 ஆயிரத்து 466 கோடி

24. தெலங்கானா - ரூபாய் 2 ஆயிரத்து 370 கோடி

25. திரிபுரா - ரூபாய் 699 கோடி

26. உத்தரபிரதேசம் - ரூபாய் 19 ஆயிரத்து 208 கோடி

27. உத்தரகாண்ட் - ரூபாய் 1,244 கோடி

28. மேற்கு வங்காளம் - ரூபாய் 7 ஆயிரத்து 866 கோடி

பாஜக ஆளும் மாநிலத்திற்கு அதிகம்:

மத்திய அரசு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மிக அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளது. உத்தரபிரதேசத்திற்கு 19 ஆயிரத்து 208 கோடி அதிகபட்சமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பீகாருக்கு 10 ஆயிரத்து 845 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியமைய உறுதுணையாக உள்ள தெலுங்கு தேசம் ஆட்சி நடத்தும் ஆந்திராவிற்கு 4 ஆயிரத்து 597 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் பாஜக அமர்ந்திருக்கும் மேற்கு வங்காளத்திற்கு 7 ஆயிரத்து 866 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

புதியதாக அமைந்துள்ள தவெக அரசுக்கு இந்த ரூபாய் 4 ஆயிரம் கோடி மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்று கருதப்படுகிறது. இந்த வரி பகிர்வை பயனுள்ள முறையில் பகிர்ந்தளிக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது.

Source: Read Full Article