திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3ம் இடத்தில் பாடப்பட்டதற்கு பின்னால் துணைவேந்தர் சந்திரசேகரின் மாஸ்டர் பிளான் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் விழா

திருநெல்வேலி மாவட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்திலும், இதன்கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதற்கிடையில் கடந்த வாரம் இந்த பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் வந்தே மாதரம், தேசிய கீதம், அதனைத் தொடர்ந்து 3ம் இடத்தில் தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த உத்தரவை அமல்படுத்தியதாக பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை உயர்க்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், திருநெல்வேலி எம்.எல்.ஏ., ஆர்.எஸ்.முருகன், கடையநல்லூர் மதிமுக எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்ளிட்டோர் புறக்கணித்தனர். தவெக அரசும் இந்த சம்பவத்தில் தனது கண்டனத்தை தெரிவித்தது. தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தது.

குறிப்பாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் இப்படி ஒரு அநீதி நடந்ததை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தது.

இதையும் படிங்க: CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!

துணைவேந்தரின் திட்டமா?

இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்பட்ட விவகாரத்தில் துணைவேந்தர் சந்திரசேகரின் திட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவியேற்றார். 3 ஆண்டு கால வரம்புடன் சந்திரசேகர் பதவியேற்ற நிலையில் வரும் செப்டம்பர் மாதத்துடன் பதவிக்காலம் முடிவடைகிறது. கடந்தாண்டு அவரது பதவிக்காலம் முடிந்த நிலையில் அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி மேலும் ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டார்.

இதுவே சந்திரசேகர் ஆளுநர் மாளிகைக்கு விசுவாசமாக செயல்படுகிறார் என்பது குற்றச்சாட்டாக மாறியது. தமிழக அரசுடனான மோதல் காரணமாக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆளுநர் கூட்டிய மாநாட்டை புறக்கணித்தனர். ஆனால் சந்திரசேகர் உள்ளிட்ட ஒரு சில துணைவேந்த்ரர்கள் பதவியேற்றனர்.

அந்த வகையில் தான் மீண்டும் பதவி நீட்டிப்பு பெறவே அப்படியே ஆளுநர் மாளிகை வழங்கிய அறிவுறுத்தலை அப்படியே பின்பற்றியுள்ளார் என தெரிவித்துள்ளார். இது பல்கலைக்கழக அளவிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னதாக ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் பட்டம் வழங்கமாட்டார் என சொல்லப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் அனைவருக்கும் பட்டம் வழங்கி சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article