தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்

தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
News Image

தவெக அமைச்சர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் மறைமுகமாகக் கிண்டல் அடித்தது பேசுபொருளாகி உள்ளது.

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டில், முதல்வர் விஜய்யின் தோளைத் தட்டிக் கொடுத்து, “நீங்கள் BEST GOVERNMENT நடத்துகிறீர்கள்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டினார். சட்ட சபையில் பாட்டு பாடுவதை விமர்சனம் செய்கிறார்கள். வீட்டில் எத்தனை பேர் அதை ரசிக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும்.

இல்லைன்னா கதை முடிஞ்சிருக்கும்

சொன்னா வருத்தப்படுவீங்க.. ரெண்டு பேரும் தப்பிச்சு வந்துட்டீங்க! ஒருத்தர் நம்ம ஆள விலைக்கு வாங்கி, தப்பிச்சாரு… இன்னொருத்தருக்கு, சேப்பாக்கத்துல இருக்கற இஸ்லாமிய மக்கள் கொஞ்சம் மனசு மாறிட்டாங்க, இல்லைன்னா கதை முடிஞ்சிருக்கும்.

எதிர்க்கட்சி வரிசையிலேயே எதிர்க் கட்சி முதல்வர், துணை முதல்வர் யாரையும் காணவில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

மக்கள் நினைப்பது நடக்கும்

கொடிவேரி (ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகில் பவானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஒரு பிரபலமான தடுப்பணை) சுற்றுலாத் தலம் ஆக வேண்டும் என்று எல்லா பொதுமக்களும் ஆசைப்படுகிறார்கள். அதற்கு 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கும்.

உங்கள் பிரதிநிதியாக முதல்வருக்கு எடுத்துச் சொல்வேன்’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் யாருமே எதிர்பாராத அளவுக்கு ஆச்சரியங்களைக் கொடுத்தது. இந்தத் தேர்தலில் திமுக 10-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது. அதிமுகவும் பாஜக,பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது.

தனித்துக் களம் கண்ட தவெக

இதில் கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகளே ஆன, தமிழக வெற்றிக் கழகம் தனித்துக் களம் கண்டது. இந்த முறை திமுகவே மீண்டும் வெல்லும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறப்பட்ட நிலையில், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கியது தவெக. முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினே கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

234 தொகுதிகளில் 107 இடங்களை தவெக கைப்பற்றிய நிலையில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதல் அமைச்சராகப் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks