எலி மருந்து சாப்பிட்டு வாட்ஸ் அப் ஸ்டேடஸ்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கரும்பியூர் பிள்ளையார் கோவில் பகுதியில் வசித்து வருபவர் பிரவீன் வயது ( வயது 31) இவருக்கு திருமணமாகி காயத்ரி ( வயது 24) என்ற மனைவியும், இவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு ஆண் குழந்தையும், இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

பிரவீன் நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரவீன் வெளியே சென்று உள்ளார்.

வெளியே சென்ற அவர் எலிமருந்தை வாங்கி கொண்டு, மேட்டுப்பாளையம் பகுதியில் மைலி அம்மன் கோவில் அருகே சென்றுள்ளார். எலிமருந்தை சாப்பிட்டு விட்டு சமூக வலைத் தளமான Whatspp ஸ்டேட்டஸில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்து RIP என்று பதிவிட்டுள்ளார்.

மனைவி தூக்கிட்டு தற்கொலை

இதனை பார்த்த அவரது மனைவி காயத்ரி தனது கணவர் இறந்து விட்டதாக நினைத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எலி பேஸ்ட்டை சாப்பிட்டு விட்டு மயக்கம் அடைந்த நிலையில் கோவில் அருகே கிடந்த பிரவீனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

தற்போது திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆலிவலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தகராறில் தனக்குத் தானே சமூக வலைத்தளத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்ட கணவன். அதை பார்த்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மனைவியின் இறப்பு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article