மின் கட்டண சர்ச்சை Vs காவிரி பிரச்சனை - கர்நாடகா பயணம் குறித்து முக்கிய தகவல் சொன்ன CTR நிர்மல்

மின் கட்டண சர்ச்சை Vs காவிரி பிரச்சனை - கர்நாடகா பயணம் குறித்து முக்கிய தகவல் சொன்ன CTR நிர்மல்
News Image

சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது ;

மின் கட்டண உயர்வு சம்பந்தமாக 3.70 லட்சம் புகார்கள் வந்துள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். அவர் வாட்ஸ் அப்பில் வந்த தவறான தகவலை நம்பி இவர் கூறியுள்ளார்.

சமூக வலைத் தளங்களில் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வந்தன. இதன் அடிப்படையில் ரொட்டீன் செக்கப் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டும் இதே போன்று இரண்டு முதல் மூன்று மடங்கு மின் கட்டணம் உயர்வாக வந்துள்ளது. அதன் படி கடந்த ஆண்டு 11 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மூன்று மடங்கு மின் கட்டணம் உயர்வாக வந்தது.

இந்த ஆண்டு 9 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே 2 முதல் 3மடங்கு மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது. கடந்தாண்டு ஒப்பிடுகையில் இது குறைவு. இதுகுறித்து புகார்கள் எதுவும் வரவில்லை. மின் கட்டணத்தில் மாறுபாடுகள் உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகளில் மறுமதிப்பீடு (Re-assesmemt) நடைபெற்று வருகிறது. மக்களை குழப்பும் விதமாக மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்குள் மறு மதிப்பீடு

வாட்ஸ் அப்பில் வரும் தகவலை வைத்து ஸ்டாலின் மக்களை குழப்ப வேண்டாம்.
மின்கட்டணத்தில் மாறுபாடுகள் உள்ள 3 லட்சத்து 50 மின் இணைப்புகளில் மறுமதிப்பீடு (Re-assesmemt) நடைபெற்று வருகிறது. ஒரு வார காலத்திற்குள் மறு மதிப்பீட்டு பணிகள் நிறைவடையும்.

மக்களை குழப்பும் விதமாக வழக்கு

மேகதாது விஷயத்தில் நாம் தெளிவாக உள்ளோம். மேகதாத விவகாரம் குறித்து தேவையில்லாமல் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. சட்டப் பேரவையில் அதிமுகவின் முன்னிலையில்தான் மேகதாது விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேவையில்லாமல் மக்களை குழப்பம் விதமாக தமிழக மக்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்து உள்ளது.

மேகதாது விவகாரம் இரண்டு மாநில சம்பந்தப்பட்ட பிரச்சனை. ஒன்றிய அரசு தான் இதற்கு தீர்வு கொடுக்க முடியும். அது தவிர்த்து சுமூகமான முறையில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கையில் முதல்வர் ஆலோசித்து வருகிறார்.  முடிவுகள் விரைவாக எடுக்கப்படும் உச்சநீதிமன்றம் மூலமாக தமிழ்நாட்டுக்கு தேவையான நீரை பெற வேண்டும். அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அமைச்சரே தவறாக தமிழக மக்களுக்கு எதிராக பேசிக் கொண்டு வருகிறார். மாநிலங்களுக்கு நதிநீர் பங்கீடு குறித்து எதுவும் புரியாமல் ஒன்றிய அமைச்சர் பேசி வருகிறார். அதைக் கூட கண்டிக்க இங்கே யாரும் இல்லை. எதிர்க் கட்சியை சார்ந்தவர்கள் இதை கண்டிக்கவில்லை. விரைவில் இது குறித்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்.

முதல்வர் கர்நாடகா செல்வது தொடர்பான எந்த முடிவும் இல்லை

காவிரி விவகாரத்தை வைத்துத் தான் கர்நாடக அரசு அரசியல் செய்து வருகிறது. 100 ஆண்டுகளாக கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்ற அரசியலைத் தான் செய்து வருகிறார்கள். இதை அரிசியலாக பார்க்காமல் தமிழக விவசாயிகளின் நலன் சம்பந்தமாக பார்க்க வேண்டும் அது தான் எங்கள் எண்ணம். காவேரி நதிநீர் பங்கீடு குறித்து ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் அறிவிப்புகள் வெளியிடப்படும்.

காவிரி நீரை பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தை நாடுவது, காவிரி நடுவர் மன்றம் அமைப்பது, மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தையின் மூலம் காவிரி நதிநீரை பெறுவது, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது இந்த நான்கு வழிகளை பயன்படுத்தி காவிரி நீரை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை முதல்வர் செய்வார்.

காவிரி நதிநீர் விவகாரம் குறித்து பேசுவதற்கு முதல்வர் கர்நாடகா செல்வது தொடர்பான எந்த முடிவும் இது வரை எடுக்கவில்லை. மின் கட்டணம் உயர்வு குறித்து மறுமதிப்பீடு நடைபெற்று வருகிறது. வரும் நாட்களில் என்ன சிக்கல் உள்ளது என்பதை வெளியிடுவோம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks