விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் காரணைபெரிச்சானூர்110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று (21.07.2026) செவ்வாய் கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 4.00 வரையும் மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, அரசூர் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 09.00 மணி முதல் மாலை 4.00 வரையும் மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

மின்தடை ஏற்படும் பகுதிகள் :

திருச்சிற்றம்பலம் துணைமின் நிலையம் பராமரிப்பு பணி

திருச்சிற்றம்பலம், கடப்பேரிகுப்பம், பூத்துறை, காசிபாளையம், கலைவாணர் நகர், பட்டானுார், கோட்டகுப்பம், முதலியார்சாவடி, புளிச்சபள்ளம், ஆண்டியார்பாளையம், மாத்துார், எல்லதரசு, பெரியகொழுவாரி, கொடூர், மொன்ணையம்பட்டு, ஆரோவில், இரும்பை, ராயப்புதுபாக்கம், ஆப்பிரம்பட்டு, ராவுத்தன்குப்பம், ஒழிந்தியாப்பட்டு, நாவற்குளம், நெசல், வில்வநத்தம், கழுப்பெரும்பாக்கம், மயிலம் ரோடு.

அரசூர் துணைமின் நிலையம் பராமரிப்பு பணி

அரசூர், மேலமங்கலம், பருகம்பட்டு, ஆனத்தூர், மாதம்பட்டு, மடபட்டு, சேமங்கலம், இருந்தை, மேல்தானிகலம்பட்டு, குமாரமங்கலம், அரும்பட்டு, பரவனந்தல், பேராங்கியூர், மேட்டத்தூர், சித்தாநங்கூர், இருவேல்பட்டு, காரப்பட்டு, ஆணனைவரி, மாமந்தூர், செம்மார், ஆலங்குப்பம், கிராமம், தென்மங்கலம், கே.வி.பாலயம், கரடிப்பாக்கம், காந்தளவடி.

காரணைபெரிச்சானூர் துணைமின் நிலையம் பராமரிப்பு பணி

மின்தடை ஏற்படும் பகுதிகள் :

காரணைபெரிச்சானூர், ஓதியத்தூர், கண்டாச்சிபுரம், சித்தலிங்கமடம், முகையூர், புதுப்பாளையம், A.கூடலூர், S.பில்ராம்பட்டு, ஆயந்தூர், பரனூர், ஆலம்பாடி, காடகனூர், சென்னகுணம், V.சித்தாமூர், ஆற்காடு, C.மெய்யூர், சத்தியகண்டநல்லூர், மேல்வாலை.

எனவே பொதுமக்கள் தங்களுக்கு மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் விழுப்புரம் மாவட்ட மின்வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.

துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

பாதுகாப்பு சோதனை

இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை

Source: Read Full Article