ஈரானின் கிழக்குப் பகுதியில் கேட்ட வெடிச்சத்தம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானை நோக்கி 1,000 ஏவுகணைகள் தயார் என எச்சரித்த சிறிது நேரத்திலேயே, ஈரானின் தலைநகரான டெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டு, பரவலான பீதியை ஏற்படுத்தின. இந்த வெடிப்புகள் குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், ஈரானின் ஆரம்பகட்ட பதில், அவற்றை "கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்புகள்" என்று கூறியது. வெடிப்புகளுக்கான காரணம், சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

டெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த வெடிப்புகளுக்கு என்ன காரணம் என்றோ அல்லது அவை ஏதேனும் ராணுவ நடவடிக்கைகளுடன் தொடர்புடையவையா என்றோ அந்த நிறுவனம் கூறவில்லை.

ஈரான் என்ன கூறியது.?

குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, அது குறித்து கருத்து தெரிவித்த ஈரானிய அதிகாரிகள், ஆரம்பத்தில் அவை "கட்டுப்பாட்டு வெடிப்புகள்" என்று தெரிவித்தனர். இருப்பினும், இதுவரை விரிவான தகவல்கள் எதுவும் பகிரப்படவில்லை. எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ உறுதி செய்யப்படவில்லை.

'1000 ஏவுகணைகள்' குறித்து டிரம்ப் எச்சரித்திருந்தார்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் சீராக அதிகரித்து வரும் நிலையில், இந்த குண்டுவெடிப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய அமெரிக்க அதிபரைக் கொலை செய்ய ஏதேனும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அமெரிக்கா 1000 ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக, தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக பக்கத்தில் ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தாம் ஏற்கனவே உத்தரவுகளை பிறப்பித்து விட்டதாகவும், தேவைப்பட்டால், அமெரிக்க ராணுவம் ஒரு வருடம் வரை நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஈரானின் அனைத்து முக்கிய நிலைகளையும் முற்றிலுமாக அழிக்க முடியும் என்றும் ட்ரம்ப் கூறினார்.

அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் டெஹ்ரான் குண்டுவெடிப்பு

மேற்கு ஆசியாவில் நிலைமை மிகவும் பதற்றமாகவே உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபத்தில் நடந்த தாக்குதல்கள், அப்பகுதியில் அமெரிக்க ராணுவ குவிப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே தொடரும் காரசாரமான வார்த்தைப் போர்கள் ஆகியவை, நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன.

ஹார்முஸ் தாக்குதல்களை நிறுத்துவதாக ஈரான் பகிரங்கமாக உறுதியளிக்க வலியுறுத்தும் அமெரிக்கா

இதனிடையே, முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதாக, டெஹ்ரான் பகிரங்கமாக உறுதியளிக்க வேண்டும் என வாஷிங்டன் கோரி வருவதாக, பெயர் குறிப்பிடப்படாத மூத்த அமெரிக்க அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஈரானிய உயர்மட்டத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். ஆனால், பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை உறுதிசெய்ய உதவும் வகையில், ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதலை தனது படைகள் நிறுத்திக்கொள்ளும் என்று ஈரான் ஓர் அறிக்கை வெளியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

கடந்த வாரம் ஹார்முஸில் 3 கத்தார் மற்றும் சவூதி வர்த்தக எண்ணெய்க் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்தார். இந்த தாக்குதல்கள், "தங்கள் அமைப்பின் தவறான பகுதியிலிருந்து" நடத்தப்பட்டதாக ஈரான் கூறியதாக, ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எனினும், தற்போது ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையல், மத்திய கிழக்கில் மீண்டும் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Source: Read Full Article