Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்

Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
News Image

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்தது முதலே விஜய் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒப்பந்தங்களில் பல முறைகேடுகள் கடந்த ஆட்சியில் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஏராளமான டெண்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில், காவலர் நியமனத்தையும் ஓராண்டுக்கு ஒத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில்,

கண்டனம்:

தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள்.

ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

சீருடைப்பணியாளர்…
— Udhay (@Udhaystalin) July 17, 2026

இளைஞர்கள் ஏமாற்றம்:

சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஆண்டுதான் காவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. இது, காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

இதன் மூலம், ஏற்கெனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கையும், காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு.

உடனடி நியமனம்:

எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks