TVK Vijay: ஊழல்களைத் தோண்டும் முதலமைச்சர் விஜய்.. பீதியில் முன்னாள் அமைச்சர்கள்!

TVK Vijay: ஊழல்களைத் தோண்டும் முதலமைச்சர் விஜய்.. பீதியில் முன்னாள் அமைச்சர்கள்!
News Image

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. திமுக-விற்கு எதிராக குரல் கொடுத்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார் விஜய். கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் ஊழல் பட்டியலை விஜய் தயாரிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஊழல்களைத் தோண்டும் விஜய்:

திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எவ வேலு வீட்டில் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினார். இது திமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும்   பீதியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து யாருடைய வீடு, அலுவலகங்களில் சோதனை நடக்கும் என்ற அச்சத்திலே உள்ளனர்.

தவெக ஆட்சியைக் கவிழ்க்க நடந்த பேர விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மிக கடுமையாக கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தனது ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் சதிக்கு தக்க பதிலடி தர வேண்டும் என்று அவர் முழு முனைப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியின் நடந்த ஊழல்களை தோண்டி எடுக்க அதிகாரிகளுக்கு கறாராக உத்தரவிட்டுள்ளார். கரூரில் நடந்த கூட்டத்தில் லஞ்சம் யார் கேட்டால் கொடுக்க முடியாது என்று முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக கூறியதும் லஞ்ச பேர்வழிகள் பலருக்கும் பெரிய பீதியை உண்டாக்கியுள்ளது. மேலும், அந்த கூட்டத்தில் கரூர் கம்பெனி முதலாளி என்று செந்தில் பாலாஜியையும் சரமாரியாக விமர்சித்தார்.

நெருக்கம் காட்டும் முன்னாள் அமைச்சர்கள்:

இந்த சூழலில், தவெக-வில் நடப்பது என்ன? என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக திமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தவெக-வின் மாவட்டச் செயலாளர்களுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர். அவர்களுடன் இணக்கமான போக்கில் இருக்க முயற்சித்து வருகின்றனர். இதன்மூலம் தவெக தலைமையில் நடப்பது என்ன? என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

இதுமட்டுமின்றி, தவெக மாவட்டச் செயலாளர்களுடனும், சில எம்எல்ஏ-க்களுடனும் நெருக்கமாக இருந்தால் கீழ்மட்டத்தில் சிறிய சிறிய ஒப்பந்தங்கள் பெறும் பணிகள் தடையில்லாமல் நடக்கும் என்றும் கருதியும் நெருக்கம் காட்டி வருகின்றனர்.

அச்சத்தில் நிர்வாகிகள்:

அதேசமயம், விஜய் தன்னைச் சுற்றி அரசு நிர்வாகத்திலும், தனது கட்சி நிர்வாகத்திலும் என்னென்ன நடந்து வருகிறது? என்பதையும் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறார். இதனால், ஏதேனும் ஒழுங்கீன நடவடிக்கையில் சிக்கினால் கட்சிப்பதவி பறிபோய்விடுமோ? என்ற அச்சத்திலும் உள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks