TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?

TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
News Image

திமுகவின் அழுக்கு நிறைந்த வரலாற்றை எடுத்துச்  சொன்னால் எதிர்கால தலைமுறை கூட தூக்கி எறிவார்கள் என திமுக ஐடி விங் தாறுமாறாக விமர்சனம் செய்துள்ளது.

முதலமைச்சர் விஜய் கரூர் பயணம்

கடந்த ஜூலை 10ம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் அவர் பேசுகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி எ.வ.வேலு, செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலரையும் தாறூமாறாக விமர்சித்தார். அதேசமயம் அதிமுகவை குறிப்பிட்டும் பேசினார். விஜயின் இந்த பேச்சுக்கு இரு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. அந்த வகையில் திமுக ஐடி விங் வெளியிட்ட பதிவில், “மூன்றாந்தர வீதிப் பேச்சாளரைப் போலத் தரம் தாழ்ந்து பேசும் முதலமைச்சர் விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும். நாவடக்கம் என்பது வேண்டும். பொறுப்புணர்ந்து செயல்படுங்கள்” என காட்டமாக தெரிவித்தது.

பதிலடி கொடுத்த தவெக

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய தவெக ஐடி விங், “நாகரிகம் குறித்துத் தீயசக்தி திமுக வகுப்பெடுப்பது என்பது, வாந்தி எடுப்பது போல அருவருப்பாக இருக்கிறது. அரசியல் மேடைகளில் அவதூறுகளை அள்ளி வீசுவதும் திமுகவிற்கே வாய்வந்த கலை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரை 'அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்' என்று கொச்சையாகவும் பச்சையாகவும் பேசியதை ஊர் மறந்துவிட்டதா?

உலகம் மறந்துவிட்டதா?. பச்சையாக மட்டுமா, அரசியல் ரீதியாக எதிர்க்கத் திராணி இல்லாமல் மஞ்சளாகவும் சிவப்பாகவும் தரம்தாழ்ந்து பேசிவரும் தீயசக்தி திமுக, நாகரிகம் பற்றிப் பேசலாமா? அதற்கான தகுதிதான் இருக்கிறதா? சொந்தக் கட்சி வேட்பாளரையே பெண் என்றும் பாராமல் அழகிய வேட்பாளர் என்று பேசியதெல்லாம் எந்த வகை நாகரிகம்? நாகரிகம் பற்றிப் பேச நீங்க எல்லாம் எங்கிருந்து தான் வர்றீங்க?

நாகரிகம் குறித்துத் தீயசக்தி திமுக வகுப்பெடுப்பது என்பது, வாந்தி எடுப்பது போல அருவருப்பாக இருக்கிறது. அரசியல் மேடைகளில் அவதூறுகளை அள்ளி வீசுவதும் திமுகவிற்கே வாய்வந்த கலை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரை ‘அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்' என்று கொச்சையாகவும்…
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) July 11, 2026

கொள்கைத் தலைவர் பற்றி எல்லாம் பேசுவதற்குத் தீயசக்தி திமுகவிற்கு எப்படி வாய்க்கிறது? உங்கள் கொள்கைத் தலைவரைச் சாடை மாடையாகவும் நேரடியாகவும் தாறுமாறாகப் பேசியதெல்லாம் மறந்துவிட்டதா, மாடர்ன் மங்குனிகளுக்கு? உங்கள் அழுக்குகளை எல்லாம் தோண்டித் துருவி எடுத்து அம்பலப்படுத்த ஆரம்பித்தால், அரசியலில் அசிங்கப்பட்டுப் போவீர்கள். அத்தனைக்கும் ஆதாரத்தை விட்டுச் செல்வதுதானே உங்கள் வரலாறு?

Also Read: ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி

திமுகவின் அழுக்கு நிறைந்த அசிங்கப் பேச்சு வரலாற்றை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தால், இன்றைய இளைஞர்களும் பெண்களும் மட்டுமன்று, வளர்ந்து வரும் தலைமுறைகூட அருவருப்பு மிகுதியால் தீயசக்தி திமுகவை அறவே ஒதுக்கி, தூரமாகத் தூக்கி எறிவார்கள். ஆகவே, அடக்கி வாசியுங்கள். இல்லையேல், மக்கள் உங்களை அடக்குவார்கள். எச்சரிக்கை” என தெரிவித்துள்ளது. இரு கட்சிகளும் சமூக வலைத்தளங்களில் சரமாரியான கருத்து மோதலில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks