TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?

TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
News Image

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் கூட்டணி நிலவரம் மொத்தமாக மாறியது. திமுக கூட்டணியில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பல கட்சிகளும் தற்போது தவெக பக்கம் தாவியுள்ளனர். ஆளுங்கட்சியாக உள்ள தவெக-வின் பக்கம் இணைந்ததால் அமைச்சரவையிலும் இடம்பிடித்து பயன் அடைந்துள்ளனர்.

தவெக ஒருங்கிணைப்பாளர் யார்?

இந்த சூழலில், தவெக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? என்பதில் பெரிய களேபரம் உருவாகி வருகிறது. மூத்த அரசியல்வாதி என்ற அடிப்படையில் வைகோவை நியமிக்க வேண்டும் என்று மதிமுக-வினரும், திருமாவளவனை நியமிக்க வேண்டும் என்று விசிக-வினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியினர் அக்கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ப.சிதம்பரத்தை நியமிக்க மறுப்பது ஏன்?

ஆனால், ப.சிதம்பரத்தை ஒருங்கிணைப்பாளராக நியமிக்க விஜய் மிகவும் தயங்கி வருவதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியினர் சிலர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தினர். ராகுல் காந்தியும் விஜய்யுடன் இணைந்து தமிழ்நாடு தேர்தலை சந்திக்க ஆர்வம் காட்டினார். ஆனால், மு.க.ஸ்டாலினுடன் நெருக்கமான உறவு கொண்ட ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேரடியாக சோனியா காந்தியுடன் பேசி திமுக கூட்டணியில் தொடர்ந்தனர்.

மேலும், தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் - தவெக கூட்டணியிலும் ப.சிதம்பரம் பெரியளவு ஈடுபாடு காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ப.சிதம்பரத்தை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்க விஜய் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. ஏனென்றால், தவெக தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சியை நடத்தி வருகிறது.

வலுவான நபரைத் தேடும் விஜய்:

ஆட்சியைக் கவிழ்க்க தவெக எம்எல்ஏ-க்களை பேரம் பேசி சில முயற்சிகள் நடந்து வரும் சூழலில், கூட்டணியை உறுதியாகவும் கட்டுக்கோப்பாகவும் கொண்டு செல்லவும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒருவரையே ஒருங்கிணைப்பாளராக நியமிக்க விஜய் விரும்புகிறார். ப.சிதம்பரத்துடன் கூட்டணி தலைவர்களுக்கு நல்ல உறவு இருந்தாலும் ராகுல் காந்தியே அவர் மீது அதிருப்தியில் இருப்பதாலும், தமிழக காங்கிரஸில் சில முக்கிய நிர்வாகிகளும் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாலும் அவரை ஒருங்கிணைப்பாளராக நியமிக்க விஜய் மிகவும் தயங்குகிறார்.

இதனால், ஆட்சிக்கு எதிராக எந்தவித சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டாலும் அதைத் தடுத்து கூட்டணியை வலுவாக கொண்டு செல்லும் ஒருவரையே ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks