Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்

Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
News Image

அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில், ஈரான் இனி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால், டெஹ்ரானிலோ, அதற்கு அருகிலோ உள்ள பாலங்கள், மின் நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசும் என கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அது குறித்த அவரது பதிவு என்ன என்பதை பார்க்கலாம்.

ட்ரம்ப்பின் பதிவு என்ன.?

இது குறித்து தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த நிமிடம் முதல், ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஹார்முஸ் ஜலசந்தியில் ஏவுகணை, ராக்கெட், ட்ரோன் அல்லது வேறு எந்த சாதனம் அல்லது ஆயுதம் மூலமாக ஒரு கப்பலைத் தாக்கும்போதெல்லாம், தலைநகர் டெஹ்ரானுக்கு அருகிலோ அல்லது உள்ளேயோ அமைந்துள்ளவை உட்பட, ஒரு பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தின் மீது அமெரிக்கா குண்டுவீசித் தகர்க்கும் என கூறியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றொரு கட்டத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடமிருந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் அமெரிக்கா

முன்னதாக, டெஹ்ரான் மீது அமெரிக்க வான் பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடத்தின. இதனிடையே, இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய ஜோர்டான் நகரம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியாவிலும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

ராஜதந்திர முயற்சிகளில் வெளிப்படையாக எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய சமீபத்திய தாக்குதல், தொடர்ச்சியாக 11-வது நாளாக நீடிக்கிறது. ஈரானிய தாக்குதல்கள் காரணமாக பெருமளவில் மூடப்பட்டிருக்கும், உலகளாவிய எரிசக்திக்கு மிக முக்கியமான நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தி மீதான தங்களது நிலைப்பாட்டில் இரு தரப்பு அதிகாரிகளும் உறுதியாக உள்ளனர்.

“ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் இன்னும் முடியவில்லை“

இந்நிலையில், ஒரு நாள் முன்னதாக, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா இன்னும் முடிக்கவில்லை என்று  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார். மத்திய கிழக்கு போரில் ஏற்பட்ட சேதங்களிலிருந்து மீண்டு வர ஈரானுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேல் தேவைப்படும் என்றும் அவர் கூறினார். அதோடு, “நாங்கள் இன்னும் முழுமையாக முடிக்கவில்லை, நாங்கள் இப்போது வெளியேறப் போவதில்லை“ என்றும் ட்ரம்ப் உறுதிபட தெரிவித்தார்.

இதனிடையே, சமீபத்தில் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "நான் உங்களிடம் சொல்கிறேன், அவர்கள் சந்திக்க மிகவும் ஆசைப்படுகிறார்கள். அவர்கள் அர்த்தமுள்ள வகையில் சந்திக்கத் தயாராகும் வரை, அவர்களை சந்திப்பதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை," என்று ஈரான் குறித்து கூறினார்.

மேலும், "அவர்கள் படுதோல்வி அடைந்து வருவதால், இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர எப்படியாவது சந்திக்க விரும்புகிறார்கள்" என்றும், அதனால் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் ஈரான் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் சமிக்ஞை அளித்திருந்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

சமீபத்திய இருதரப்பு தாக்குதல்கள் இருந்தபோதிலும், மத்தியஸ்தர்கள் மூலம் வாஷிங்டனுடன் தூதரகப் பரிமாற்றங்கள் தொடர்வதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார். மத்தியஸ்தரான பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நேற்று ஈரான் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனியுடனான சந்திப்பின்போது, ​​போரிடும் அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks