Trump Vs Iran: ஈரானின் முதல் குறியாக தான் இருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

”ஈரானை சிதைத்துவிடுங்கள்”

அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் முழுமையாக முடிவுக்கு வராதது உலக நாடுகள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “ஒருவேளை தன்னை கொல்லும் முயற்சியில் ஈரான் வெற்றி பெற்றுவிட்டால், முன்னெப்போதும் இல்லாத வகையிலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிகாட்டுதல்களை அளித்துள்ளேன். அந்நாடு இதுவரை கண்டிராத அளவில் குண்டுவீச்சுக்கு உள்ளாக்கப்படும்” என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் பல ஆண்டுகளாகத் தன்னைக் கொல்ல விரும்புவதாகவும் உடனடி படுகொலை சதித்திட்டம் குறித்த புதிய உளவுத் தகவல் எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

ஈரானின் முதல் குறியாக இருக்கிறேன் - ட்ரம்ப்

ட்ரம்பை கொல்ல ஈரான் சதிதிட்டம் தீட்டுவதாக, ரகசிய உளவுதகவலை இஸ்ரேல் வழங்கியதாக எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில், “நான் நீண்ட காலமாக அவர்களின் பட்டியலில் இருக்கிறேன். அதைத்தான் நாம் கையாண்டு வருகிறோம். ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், ஏதாவது அசம்பவம் நடந்தால், அவர்கள் இதற்கு முன் பார்த்திராத அளவில் அவர்கள் மீது குண்டுமழை பொழிய வேண்டும் என்று நான் வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறேன். இஸ்ரேல் தகவல் எதையும் முன்வைக்கவில்லை. நான் நீண்ட காலமாக ஈரானின் கொலைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறேன், வாழ்க்கை அப்படித்தான்” என ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

ஈரான் பழிவாங்க விரும்புவது ஏன்?

கடந்த 2020ம் ஆண்டு பாக்தாத் அருகே ஈரானின் உயர்மட்ட ராணுவத் தளபதி காசெம் சுலைமானியைக் கொன்ற அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு ட்ரம்ப் அனுமதி அளித்ததிலிருந்து, அவரை பழிவாங்க ஈரான் முயன்று வருகிறதாம். அண்மைக் காலங்களில் ட்ரம்ப்பைக் குறிவைத்து ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல படுகொலை சதித்திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். அதேவேளையில், ஜூலை 2024-ல் பட்லரில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது, குண்டு ஒன்று அவரது காதை உரசிச் சென்றதில், படுகொலை முயற்சியிலிருந்து ட்ரம்ப் உயிர் தப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: KIA EV: நெக்ஸானுக்கு போட்டியாக.. 520KM ரேஞ்ச் + லைஃப்டைம் பேட்டரி வாரண்டியில் கியாவின் மின்சார கார் - முழு விவரம்

சமாதான பேச்சுவார்த்தை:

அமைதி ஒப்பந்தத்தையும் மீறி மீண்டும் அமெரிக்கா மற்றும் ஈரான், ராணுவ தளங்கள் மீது மாறி மாறி தாக்குதல் நடத்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருப்பினும் இரண்டு தரப்பும் தற்போது ராணுவ நடவடிக்கைகளை கைவிட்டுள்ளன. இந்த சூழலில் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க, மத்தியஸ்தர நாடுகள் முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஈரான் தான் கோரிக்கை விடுத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையிலான எந்தவொரு போர் நிறுத்தமும் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பான சமூக வலைதள பதிவில், ”ஈரான் இஸ்லாமியக் குடியரசு பேச்சுவார்த்தைகளைத் தொடருமாறு எங்களிடம் கேட்டுக்கொண்டது. நாங்கள் அதற்கு ஒப்புக்கொண்டோம், ஆனால் போர் நிறுத்தம் முடிந்துவிட்டது என்று அமெரிக்கா அவர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Source: Read Full Article