Talangana Pocso Criminal: ஒரே இரவில் 6 பேரை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

6 பேரை கொடூரமாக கொன்ற போக்சோ குற்றவாளி:

தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி பகுதியில் கேட்போரின் குலைநடுங்கச் செய்யும் வகையிலான கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 35 வயதான நபர் ஜாமினில் வெளியே வந்து, தனது மனைவி மற்றும் இரண்டு குழுந்தைகளை கொலை செய்துள்ளார். அதோடு நில்லாமல் தன் மீது புகார் அளித்த 17 வயதுசிறுமி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களையும் ஒரே இரவில் கொன்று ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். இதையடுத்து தலைமறைவான அவரை தேடும் பணியை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.

ஒரே இரவில் அடுத்தடுத்து கொலை

குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமார் என்பவர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஷாபத் பகுதியில் உள்ள தனது வீட்டில் மனைவி பார்வதி சரிதாவை முதலில் தாக்கியுள்ளார். தொடர்ந்து தனது 4 வயது மற்றும் 18 மாதங்களே ஆன இரண்டு ஆண் மகன்களையும் அடித்து அநியாயமாக உயிரை பறித்துள்ளார். பின்பு அங்கிருந்து வெளியேறி 6 தொலைவில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று, அங்கு தங்கியிருந்த தன் மீது பாலியல் புகார் அளித்த 17 வயது சிறுமியை வீடு புகுந்து அடித்து கொலை செய்துள்ளார். அவரை தடுக்க முயன்ற சிறுமியின் தாய் மற்றும் பாட்டியையையும் தாக்கி வதைத்துள்ளார். கடந்த மே மாதம் 16ம் தேதி சிறுமி அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்கில் கைதான ராஜ்குமார், ஜாமினில் வெளியே வந்து இந்த கொடூர சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார்.

பெற்றோருக்கு தகவல் சொன்ன கொலைகாரன்

காவல்துறையின் ஆரம்ப கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, இரண்டு வெவ்வேறு இடங்களில் தலா மூன்று கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்விற்குப் பிறகு ராஜ்குமார் தனது பெற்றோரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, நடந்ததை விளக்கிச் சொல்லிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனிடையே, “தலைமறைவாகியுள்ள நபரை கைது செய்ய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தகவல்களின் அடிப்படையில் அவரை கைது செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விரைவில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி

நடந்த பிரச்னை என்ன?

ராஜ்குமார் மற்றும் பார்வதிக்கு கடந்த 2018ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதியினர் ஆரம்பத்தில் கிராமத்திற்கு வெளியே வசித்து வந்தனர், பின்னர் ஷாபத் மற்றும் தேவலகுடாவில் தங்களுக்குச் சொந்தமான வீடுகளில் குடியேறினர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். அவர்களுக்கு பிறந்த முதல் பெண் குழந்தை எதிர்பாராத விதமாக குழந்தை பருவத்திலேயே உயிரிந்துவிட்டது. இந்நிலையில் தான் சிறுமி அளித்த புகாரில் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் பிணை பெற்றுக்கொண்டு, கொலைகள் நடப்பதற்கு சுமார் ஒரு வாரம் முதல் பத்து நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். சம்பவத்திற்கு முன்பு கணவன் மற்றும் மனைவி இடையே பெரிய பிரச்னை எதுவும் இல்லை என்றும், முந்தைய நாள் மாலை பொழுதில் கூட பார்வதி உறவினர்களுடன் சாதாரணமாகப் பேசினார் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article