Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க

Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
News Image

மேற்கு ஆசியாவில் ஈரானுடன் நிலவி வரும் மோதல் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு நேற்று ஒரு பெரும் அச்சுறுத்தலை விடுத்தார். சீனா அல்லது ரஷ்யா, ஈரானுடன் போரில் ஈடுபட்டுள்ளதாக தாம் நம்பவில்லை என்றும், ஆனால் அவ்வாறு செய்தால், அது அவர்களுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும் என்றும் கூறி, ட்ரம்ப் இரு நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை விடுத்தார்.

அதிபர் ட்ரம்ப்பின் மிரட்டல் என்ன.?

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்தார். அதில், "பெய்ஜிங்கில் சமீபத்தில் நடந்த எங்கள் சந்திப்பின்போது, ​​சீன அதிபர் ஷி ஜின்பிங், எந்த சூழ்நிலையிலும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்கவோ மாட்டேன் என்று என்னிடம் கூறினார்," என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், "இது அனைத்து சீன நிறுவனங்களுக்கும் பொருந்தும். நமது பரஸ்பர உறவை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் நான் அவர்களை நம்புகிறேன். மேலும், நான் அவர்களுக்கு பல பெரும் உதவிகளையும் செய்து வருகிறேன்," என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவைப் பற்றி அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?

இதேபோல், உக்ரைனில் பயங்கரமான போர் நடந்துகொண்டிருந்தபோதிலும், நான் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் உறவை பேணி வருவதைப் போலவே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனும் அதேபோன்ற உறவை பேணும் நிலையில், அவரும் ஈரானுக்கு ஆயுதங்களை விற்க மாட்டேன் என்று என்னிடம் கூறினார்,' என அதிபர் ட்ரம்ப் அதே பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், "நான் உக்ரைனுக்கு நேரடியாக ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை. மாறாக நேட்டோ நாடுகளுக்கே விற்கிறேன் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் முழு விலையையும் செலுத்துகிறார்கள். மேலும், நேட்டோ நாடுகள் அந்த ஆயுதங்களை எங்கே, எப்படி விநியோகிக்கின்றன என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது," என்று ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

அதோடு, "எனவே, என் கருத்துப்படி, ஈரான் விவகாரத்தில் அடிக்கடி குறிப்பிடப்படும் இரண்டு முக்கிய நாடுகளும் இந்த விஷயத்தில் சம்பந்தப்படவில்லை. ஒருவேளை அவை சம்பந்தப்பட்டிருந்தால், அது அவற்றுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும். மேலும், நிச்சயமாக அது அவற்றின் நலனுக்கும் உகந்ததாக இருக்காது." என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுவது போல் கூறியுள்ளார்.

ஈரானுக்கு சீனா உதவுவதாக உலா வரும் தகவல்கள்

ஏற்கனவே, அமெரிக்கா உடன் நடந்து வரும் போரில், முதல் கட்டத்தில் ஈரானுக்கு சீனா உதவுவதாக தகவல்கள் உலா வருகின்றன. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் துல்லியமாக தாக்குவதற்கு, சீனா செய்யும் உதவி தான் காரணம் என ஒரு தகவல் இருக்கிறது. ஒருவேளை அதை மனதில் வைத்து கூட ட்ரம்ப் இத்தகைய எச்சரிக்கையை விடுத்திருக்கலாம்.

தற்போது இரண்டாம் கட்ட போர் தொடங்கியிருக்கும் நிலையில், ட்ரம்ப்பின் இந்த அச்சுறுத்தலால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஒருவேளை சீனா உதவுவது போல் தெரிந்தால், இந்த போர் எத்தகைய பெரிய போராக மாறும் என்பதை நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. ஆனால், அவ்வாறு நடக்கக் கூடாது என்பதே அனைவரின் எண்ணமாக இருக்கும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks