TN weather Rain Update (07-07-2026): சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம் எச்சரிக்கை:

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த 'காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா கடலோர பகுதிகளை பாலசோர் பகுதிகளுக்கு அருகில் கரையை கடந்தது.

அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

07-07-2026 முதல் 08-07-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

09-07-2026 முதல் 11-07-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்:

07-07-2026: மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08-07-2026: வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதையும் படியுங்கள்: Diesel Hatchback: நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்..! 35kM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், பட்ஜெட்டில் ப்ரீமியம் கார்

அரபிக்கடல் பகுதிகள்:

07-07-2026: கொங்கன்-கோவா கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள்,லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08-07-2026: மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று” வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Source: Read Full Article