Thiruma TVK Vijay: திமுக கூட்டணிக்கு எந்த இடத்தில் நாங்கள் துரோகம் செய்தோம் என விளக்க முடியுமா? என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேள்வி கேட்கும் தம்பிகள் வேண்டும் - திருமா

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலான விருதுகள் வழங்கும் விழா, சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், விருது வென்றவர்களை பாராட்டினார். தொடர்ந்து அரசியல் குறித்து பேசுகையில், “நான் எதிர்பார்ப்பது எல்லாம், எந்த அடிப்படையில் தவெகவிற்கு ஆதரவு அளித்தீர்கள்? என கேள்வி கேட்கும் இளைஞர்கள் வேண்டும். விவாதிக்கும் தம்பிகள் எனக்கு வேண்டும். திமுக கூட்டணியை விட்டு வெளியே வரும் அளவிலான நெருக்காடி எங்கே வந்தது? எப்போது வந்தது? அதை ஏன் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை? என கேட்கிறவன் எனக்கு வேண்டும். அந்த அரசியல் புரிதல் நமக்கு தேவை.

எனக்கு பதவி ஆசை இல்லை - திருமா

சட்டமன்ற உறுப்பினாரவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. சீட் கிடைப்பதே கடினம். அப்படியே கிடைத்தாலும் கூட்டணியில் கிடைப்பது கடினம். கிடைத்தாலும் போட்டியிட வாய்ப்பை பெறுவது பெரிய போராட்டம். போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு இலகுவானது அல்ல. ஆனால், நான் மங்களூர் தொகுதியில் வெற்றி பெற்று இரண்டே கால் ஆண்டுகளிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்தேன். அப்படி என்றால் எனக்கு பதவியில் ஆசை இல்லை என்கிற ஒரு நிகழ்வு தானே இது. 22 வருடங்களுக்கு முன்பு இது நடந்தது. ஆனால், இவர் பதவி ஆசையியில் செய்கிறார். சோஃபா வந்து இறங்கியதும் பேட்டி கொடுக்கிறார் என சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

டேமேஜ் செய்கிறாராம்.. - திருமா

பணம் கொடுப்பவனுக்கு வேறு வழியே தெரியாதா? அப்படி கொடுக்க வேண்டும் என நினைப்பவனுக்கு? நீங்க சொல்வதை போன்று நூற்றுக்கணக்கான கோடி என்றால் எப்படியா? சோஃபாவில் கொடுத்தனுப்ப முடியும்? அவர்கள் அரசியல் செய்கிறார்களாம், நம்மை டேமேஜ் செய்கிறார்களாம். நம்மை காயப்படுத்துகிறார்களாம், நம்முடைய தலைமையை பலவீனப்படுத்துகிறார்களாம். என்னை பற்றி எனக்கு தெரியும். என்னை மதிப்பிட வேறு எவருக்கும் அந்த ஆளுமை இல்லை. வலிமையும் இல்லை. என்னைப்பற்றி எனக்கு தெரியும். அது போதும்” என திருமாவளவன் பேசியுள்ளார். இந்த விளக்கத்தின் மூலம், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு தான் அவர் மறைமுகமாக பதிலளிப்பதாக பார்க்கப்படுகிறது.

திமுகவிற்கு கேள்வி?

தொடர்ந்து பேசுகையில், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முழக்கத்தை விஜய் முன்வைத்தாரே? அப்போது நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறினோமா? திமுக கூட்டணியை இறுதி செய்வதற்கு முன்பாக தவெகவில் இருந்து வந்து சிலர் என்னை சந்தித்தனர். அப்போதும் தோற்றாலும் சரி, பல இழப்புகளை சந்தித்தாலும் சரி மதச்சார்பற்ற கூட்டணி பலவீனப்படுவதற்கு நான் ஒரு போதும் இடம் தரமாட்டேன் என சொன்னேன். எனக்கென்று ஒரு கொள்கையும், அரசியல் நேர்மையும் இருக்கிறது. யார் இதை பற்றி பேசினார்கள்? பேரம் பேசினேன் படியவில்லை என்றும், வாய்ப்பு நிறைவேறவில்லை அதனால் இன்று தவெகவிற்கு ஆதரவு என்றும் பலர் இன்றும் பேசுகின்றனர்.

இதையும் படியுங்கள்: TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?

விவாதங்களை மடைமாற்றினர்..

திமுக தலைமையிலான கூட்டணிக்கு விசிக எந்த வகையில் துரோகம் இழைத்தது? யாராவது சொல்ல முடியுமா? ஆதாரம் காட்ட முடியுமா? வெளிப்படையாக விவாதிக்க முடியுமா? தவெகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து கடைசி நேரம் வரை தகவல் கொடுத்து திமுகவிடம் நட்பு பாராட்டினேன். ஆனால், எங்களுடைய கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு திருமாவளவன் மீது சந்தேகம் வரும் அளவிற்கு விவாதங்களை மடைமாற்றினர்” என திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

Source: Read Full Article