Thanjavur District power cut 7.7.26: தஞ்சாவூர்: "இரவு தூங்குறதுக்கு முன்னாடியே மொபைலை முழுசா சார்ஜ் போட்டுட்டு தூங்குங்க... இல்லனா நாளைக்கு பவர் பேங்க்கிட்டதான் பாசம் காட்டணும்!" என்று சொல்லும் அளவுக்கு, தஞ்சாவூர் ஒக்கநாடு கீழையூர் துணை மின் நிலையத்தைச் சேர்ந்த பகுதிகளுக்கு நாளைக்கு 8 மணி நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்கநாடு கீழையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஜூலை 7, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

மின்தடை அமலாகும் பகுதிகள்...

ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், வன்னிப்பப்பட்டு, காவரப்பட்டு, பேரையூர், கருவாக்குறிச்சி, குலமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள். அதனால்...

மொபைல் சார்ஜ் போடுங்க...
தண்ணீர் டேங்க் நிரப்பிடுங்க...
இன்வெர்ட்டர் இருந்தா இப்பவே சார்ஜ் பண்ணிடுங்க...
முக்கியமா... "மின்விசிறி இல்லாம எப்படி இருக்கப் போறோம்?"ன்னு இப்பவே மனசை தயார் பண்ணிக்கோங்க! காலை 9 மணிக்கு பிறகு ஃபேனை பார்த்து ரிமோட் அழுத்தாதீங்க!

வழக்கம்போல காலை 9 மணிக்கு ஃபேன் சுத்தலன்னு ரிமோட்டை இரண்டு முறை அழுத்தி, "என்னாச்சு?"ன்னு மேலே பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், மோட்டார்... எல்லாமே நாளைக்கு 8 மணிநேரம் "விடுமுறை" கொண்டாடப் போகின்றன.

இந்த வெயிலில் கரண்ட் போகுதேன்னு புலம்புறதுக்கு முன்னாடி, மின்வாரியம் சொல்லுற காரணமும் முக்கியம்தான். துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவே இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்த பிறகு மின்விநியோகம் வழக்கம்போல் வழங்கப்படும்.

"இரவு சார்ஜ்... காலை தண்ணீர்... மதியம் பொறுமை..." இந்த மூன்றையும் மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் நாளைய 8 மணி நேரத்தை ஈஸியாக கடந்து விடலாம்!

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும். எனவே நாளை காலை மின்தடையை மறந்திடாம சீக்கரமே உங்கள் தேவைகளை முடிச்சுக்கோங்க.

Source: Read Full Article