Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு

Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
News Image

தாய் மாமன் தங்க மோதிர திட்டம்

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக தவெக அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில், 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்படுள்ளது. இந்த நிலையில் தாய் மாமன் தங்க மோதிர திட்டம் தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அந்த வகையில் தமிழர் பாரம்பரியத்தில், "தாய்மாமன் சீர்" என்ற மரபின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கப்படவுள்ளது.

தங்க மோதிரம்- தேவைப்படும் ஆவணங்கள்

முதலமைச்சர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22 2026 முதல் அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டமானது  "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று  தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் துவக்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் சுமார் 7.8 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில், அரசு சுகாதார நிலையங்கள் ஏறக்குறைய 4.2 லட்சம் (53%) பிரசவங்களை மேற்கொள்கின்றன. அந்த வகையில், அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

இந்த நிலையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் பயன்பெற தேவைப்படும் ஆவணங்களாக  (i) குடும்ப அட்டை (Ration Card); (ii) வாக்காளர் அடையாள அட்டை; (iii) ஆதார் அட்டை; (iv) தொழிலாளர் நல வாரியங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை; (v) அஞ்சல் துறையால் வழங்கப்பட்ட "முகவரிச் சான்று அட்டை" (Proof of Address Card); (அல்லது) (vi) பிறப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில், ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.  "தாய் மாமன் தங்க மோதிரம்" திட்டத்திற்காகத் தங்கம் கொள்முதல் செய்ய TNMSC டெண்டர் கோரியுள்ளது.

4.41 லட்சம் தங்க மோதிரத்திற்கு டெண்டர்

அந்த வகையில் ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக திட்ட மதிப்பீடாக ரூ 755.83 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கத்தின் தரம் 22 கேரட்டாக இருக்க வேண்டும் எனவும், 916 ஹால்மார்க் பெற்றிருக்க வேண்டும் என அந்த ஒப்பந்த புள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று முதல் அடுத்த மாதம் 17ஆம் தேதி வரை டெண்டர்க்கான கால அவகாசம் அடுத்த மாதம் 18ஆம் தேதி டெண்டர் இறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks