TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு

TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
News Image

வருமானத்தை கொட்டும் டாஸ்மாக்

தமிழகத்தில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகள் மூலம் தினந்தோறும் 100 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிலும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் 200 கோடி ரூபாயை வசூல் தாண்டும். இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கையும் அரசு மேற்கொண்டது. டாஸ்மாக் ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இருந்த போதும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர் கதையாகவே உள்ளது.

டாஸ்மாக் ஊழியர்கள் ஊதியம்

இந்த நிலையில் புதிதாக தவெக அரசு பதவியேற்ற நிலையில், பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில் தங்களுக்கு மாத ஊதியம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் என வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊதியத்தை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும் என கேள்வி எழுப்பினார்கள். எனவே ஊதியத்தை அதிகரித்து கொடுத்தால் பாட்டிலுக்கு கூடுதல் பணம் பெறுவதை நிறுத்திக்கொள்வோம் என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை நிறேவேற்றும் வகையில், இன்று திடீரென டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியர்கள் ஊதியம் உயர்வு

அந்த வகையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு இனி ஒட்டுமொத்தமாக 553.72 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.புதிய ஊதிய உயர்வால்அரசுக்கு 110.74 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், உதவி விற்பனையாளருக்கு 14,030 ரூபாயில் இருந்த 17,925 ரூபாய் ஊதிய உயர்த்தப்பட்டுள்ளது.  விற்பனையாளர்களுக்கு 15,530 ரூபாயிலிருந்து 19,413 ரூபாயாக ஊதிய உயர்ந்துள்ளது. சூப்பர்வைசர்களுக்கு 17,850 ரூபாயில் இருந்து 22,313 ரூபாயாக ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது.

பாட்டிலுக்கு 10 ரூபாய்க்கு செக்

இந்த ஊதிய உயர்வு காரணமாக டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலித்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. எனவே இனி டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக பாட்டிலுக்கு 10 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியதில்லை என்பதால் மதுபான பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது மட்டுமில்லாமல் டாஸ்மாக் ஊழியர்களின் சம்பள உயர்வால் மதுபான விலை உயர்த்தப்படுமா.? என்ற கேள்வி எழுந்த நிலையல் மதுபான விலை உயர்த்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குடிமகன்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks