Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்

Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
News Image

TN Govt Super Speciality Medical Course: மாநில அரசு மருத்துவர்களுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் முழுமையாக நிரப்ப முடியாததற்கு கடுமையான விதிமுறைகளும் காரணமாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு:

மருத்துவத்தில் சிறப்பு நிபுணத்துவம் அல்லது சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்பது சுகாதார பிரிவில், மேம்பட்ட, மிகவும் கவனம் செலுத்தப்பட்ட பிரிவு. அதாவது ஒரு பொதுவான அல்லது பரந்த மருத்துவ சிறப்புத் துறைக்கு அப்பாற்பட்டது. மருத்துவர்கள் உடலின் குறிப்பிட்ட உறுப்பு மண்டலங்களுக்கோ அல்லது சிக்கலான, கடுமையான நோய்களுக்கோ சிகிச்சை அளிக்கப் மேம்பட்ட பயிற்சியை பெறுகிறார்கள். குறிப்பிட்ட சிறப்புத்துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் 3 வருடங்களுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பிற்கு நீட் தேர்வு மூலம் பயிற்சி பெற்று விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் இந்த படிப்பிற்கு சுமார் 7 ஆயிரத்து 500 இடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டிற்கு என 422 இடங்கள் ஒதுக்கப்பட, அதில் 50 சதவிகிதம் அதவாது 215 இடங்கள் கட்டாயமாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக ஒதுக்கப்படுகிறது. அந்த இடங்கள் முழுமையாக நிரப்ப முடியாத சூழல் என்பது தொடர்ந்து நிலவி வருவது அரசியல் பிரச்னையாக வெடித்துள்ளது.

தொடர்ந்து பறிபோகும் மாநில மருத்துவ வாய்ப்புகள்:

நடப்பாண்டில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட 215 இடங்களில் 151 இடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் மீண்டும் அவை தேசிய இடஒதுக்கீட்டிற்கே சென்றுள்ளது, இதற்கு ஆளும் தவெக அரசின் திறமையின்மையே காரணம் என முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், உண்மை நிலவரம் வேறாக உள்ளது.  திமுக ஆட்சிக் காலத்திலேயே 2024ம் ஆண்டில் 119 இடங்களும், 2025ம் ஆண்டில் 145 இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், அரசு விதித்துள்ள சில கடுமையான விதிகள் காரணமாகவும் அரசு மருத்துவர்கள் இந்த படிப்பில் சேர தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் சிக்கல்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, குறிப்பிட்ட கட்-ஆஃப் மதிப்பெண்களை அடைந்தால் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பினை தொடர்வதற்கான வாய்ப்பினை பெற முடியும். அது மட்டுமின்றி

1. வாழ்நாள் முழுவதும் கட்டாய பணி:

மருத்துவர்கள் இடைக்காலத்தில் விலகும் வாய்ப்பு ஏதுமின்றி, பணி ஓய்வு பெறும் வரை தமிழ்நாடு அரசுக்குச் சேவை செய்வதற்கான ₹50 லட்சம் மதிப்பிலான பிணைப் பத்திரத்தை (bond) எழுதித் தர வேண்டும்.

2. குடும்ப உறுப்பினர்களின் உத்தரவாதம்

பிணைப் பத்திரத்தை உறுதி செய்வதற்கு, இரண்டு நிரந்தர அரசு ஊழியர்களையும் ஒரு குடும்ப உறுப்பினரையும் நிதி உத்தரவாததாரர்களாகக் கண்டறிய வேண்டியுள்ளது. இதனை மருத்துவர்கள் ஒரு பெரும் நடைமுறைச் சிக்கலாகக் கருதுகின்றனர்

இதையும் படியுங்கள்: TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை

3. பெரிய ஊதியத்திற்குவாய்ப்பில்லை

கடுமையான சவால்கள் நிறைந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி பட்டப் படிப்பை நிறைவு செய்வதன் மூலமே பதவி உயர்வு, ஊதிய உயர்வு அல்லது தங்களின் சிறப்புத் துறையில் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பணி நியமனம் கிடைத்துவிடும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படுவதில்லை

4. பணிச்சுமை

தனியார் துறையை சேர்ந்த மருத்துவர்கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்விற்காக பிரத்யேகமாக நேரம் ஒதுக்கி தயாராகின்றனர். ஆனால், அரசு மருத்துவர்கள் தங்கள் பணியை தொடர்ந்தபடியே, தேர்விற்கும் தயாராக வேண்டி இருப்பதால், மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்

5. காலிப்பணியிடங்கள்

மேம்பட்ட மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ப, இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை போதுமான அளவில் உருவாக்கவோ அல்லது விரிவுபடுத்தவோ அரசு தவறிவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பெருமிதம்

ஸ்டாலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், “முந்தைய ஆட்சியைப் போல நிரப்பப்படாத இடங்களை உடனடியாக ஒப்படைக்க தவெக அரசு மறுத்துவிட்டது. தேசிய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் இடங்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அதே தகுதி மதிப்பெண் (Cut-off) அடிப்படையில் மட்டுமே இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை இரண்டாம் கட்ட கலந்தாய்விற்குப் பிறகு, நிரப்பப்படாத மருத்துவ இடங்கள் இருப்பின் அதனை நிரப்புவதற்காக தகுதி மதிப்பெண் குறைக்க முடிவு செய்யப்பட்டால், அந்த இடங்களில் 50 சதவிகித இடங்கள் உடனடியாக தமிழ்நாடு அரசிற்கேதிருப்பி அளிக்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் வாதங்கள் முற்றிலுமாக ஏற்கப்பட்டுள்ளன” என விளக்கமளித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks