அரசு மதுபானக்கடையான டாஸ்மாக்கில் இனிமேல் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்க மாட்டோம் என பணியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை

தமிழ்நாட்டில் தற்போது 4,765 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. தவெக அரசு பொறுப்பேற்றவுடன் 717 கடைகள் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் இருந்ததை மூடியதால் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. டாஸ்மாக் மதுபானம் மூலம் கிடைக்கும் வருமானம் தான் தமிழ்நாடு அரசின் வருவாய் மூலங்களில் முதன்மையானதாக உள்ளது.

இப்படியான நிலையில் டாஸ்மாக்கில் மதுபானங்கள் அடிப்படை விலையை விட கூடுதலாக ரூ.20 வரை விற்பனை செய்யப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பாட்டில்களை ஆங்காங்கே வீசுவதால் ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு ரூ.10 கூடுதலாக பெறப்பட்டு பாட்டில்களை ஒப்படைத்தால் மீண்டும் அந்த ரூ.10 திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை விட இன்னும் ரூ.10 கூடுதலாக பெற்றது தொடர்கதையாக இருந்து வந்தது.

தவெக அரசின் அதிரடி நடவடிக்கை

இவ்வாறு கூடுதலாக வசூலிக்கும் ஒவ்வொரு பத்து ரூபாயும் கட்சி நிதியாக வழங்கப்படுவதாகவும், டாஸ்மாக் கடையின் இதர செலவுகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. தவெக அரசு பொறுப்பேற்றவுடன் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்கும் கடைகளின் ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 3 முறை தவறு செய்தால் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தாங்கள் பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும், பணி நிரந்தரம், சம்பள உயர்வு போன்றவைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இனி கூடுதல் விலைக்கு விற்க மாட்டோம்

இப்படியான நிலையில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விக்னேஷை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் பழனி பாரதி, “பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சரை சந்தித்தோம். அப்போது பல பிரச்னைகள் பற்றி பேசினோம். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் விஷயத்தில் நடவடிக்கை மேற்கொள்ள டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டார். நாங்களும் சம்மதித்துள்ளோம்.

Also Read: தனியார் கைகளில் டாஸ்மாக்? “இந்த ஆபத்தான முடிவைக் கைவிடுங்கள்” - டிடிவி தினகரன் கொடுத்த வார்னிங்

அதேசமயம் அடிப்படை விலையை கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது என அமைச்சர் விக்னேஷ் சொல்வதை எங்கள் சங்கம் முழு மனதாக வரவேற்கிறது. மதுபானங்களை இனி கூடுதல் விலைக்கு விற்க மாட்டோம் என கொள்கை முடிவு எடுத்துள்ளோம். இதனால் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும், செலவீனங்கள் பற்றியும் சொன்னோம். அதற்கேற்ப நடவடிக்கைகள் நிச்சயம் எடுப்போம்” என தெரிவித்தார். இந்த செய்தி மதுபான பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article