Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
News Image

கரூரில் உள்ள முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர் சர்ச்சையில் செந்தில் பாலாஜி

கடந்த திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். திமுக ஆட்சியில் பழைய வழக்கு ஒன்றில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 471 நாட்கள் சிறையில் இருந்தார். இதனால் அவர் அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது. ஜாமினில் வெளிவந்த அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் கடுமையான ஆட்சேபம் தெரிவித்ததால் மீண்டும் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

இப்படியான நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் இருந்து மாறி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.

தவெக அரசை கவிழ்க்க குதிரைபேரம்

இதற்கிடையில் தவெக அரசை கவிழ்க்க சிலர் பணப்பேரம் பேசி தன்னை அணுகியதாக ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜா திருவல்லிக்கேணி போலீசில் புகாரளித்தார். இதனடிப்படையில் விசாரணை செய்த போலீசார் இதன் பின்னணியில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் இருப்பதை கண்டறிந்ததாக தகவல் வெளியானது. தவெக அரசை சதி செய்து கவிழ்க்க முயன்ற வழக்கில் இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய இருவரும் சுமார் இரண்டு வார காலம் தலைமறைவாக இருந்தனர். முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில் அதுவும் கிடைத்தது.  ஆனால் அதன்பிறகு சுமார் 16 நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் கடந்த சில நாட்களாக தான் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தவெக அரசை கவிழ்க்க செய்யப்பட்ட சதி தொடர்பான விசாரணையில் இதுவரை மொத்தம் ரூ. 4.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் ராமேஸ்வரம்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு செந்தில் பாலாஜி பெற்றோர் மட்டுமே வசிக்கும் நிலையில் அவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமான கரூர் கோயம்பள்ளியில் உள்ள திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், கரூர் கோதை நகரில் உள்ள கார்த்திக் ஆகியோர் வீடு, கரூரில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks