Senthil Balaji: டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜி இன்று கைதா? உச்சநீதிமன்றத்தில் விசாரணை

Senthil Balaji: டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜி இன்று கைதா? உச்சநீதிமன்றத்தில் விசாரணை
News Image

திமுக-வின் கடந்த கால ஆட்சியில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் செந்தில் பாலாஜி. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், டாஸ்மாக் நிர்வாகத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குனர் விசாகன், முன்னாள் மேலாளர்கள் ராமதுரைமுருகன், பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் நேர்முக உதவியாளர் பாஸ்கர், நண்பர் ரத்தேஷ் ராஜ்சண்முகவேல், கார்த்திக் ஆகியோர் மீது குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

டாஸ்மாக் முறைகேடு:

கோவை, நீலகிரி, திருப்பூர், ஊட்டி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் 284 பார்கள் முறையான சட்ட அனுமதி இல்லாமல் இயங்கி வந்ததாகவும், இதனால் அரசுக்கு 2022-23 ஆண்டில் மட்டும் ரூபாய் 32 கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், மதுபாட்டில்களை குடோனில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்வதற்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 100 கோடியிலும் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை:

லஞ்ச ஒழிப்புத்துறை டாஸ்மாக் முறைகேட்டில் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

செந்தில் பாலாஜி தரப்பில் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எம்எல்ஏ-க்கள் குதிரை பேர வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு நேற்று மாலை ஆஜராக வேண்டிய செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.  இதனால், அவர் தலைமறைவாகி விட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கைதாகிறாரா செந்தில் பாலாஜி?

இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக விசாகனின் வாக்குமூலம் இருப்பதால் அவருக்கு முன்ஜாமின் வழங்குவதில் மிகப்பெரிய சவால் உள்ளது. இன்று உச்சநீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டால் அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

கடந்த முறை திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோதே அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. அப்போது பல மாதங்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி பின்னர் ஜாமினில் வெளிவந்த பிறகு அமைச்சர் பதவியையும் இழக்க நேரிட்டது. தற்போது எம்எல்ஏ- வாக உள்ள செந்தில் பாலாஜி மீண்டும் கைது நடவடிக்கைக்கு ஆளானால் திமுக-விற்கு இது மேலும் பின்னடைவை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks